அடடா! HCL-ல வேலை பார்த்தா பென்ஸ் கார் பரிசா? கலக்குற சந்துரு!
தங்களிடம் இருக்கும் ஊழியர்களை தக்க வைக்க பல நிறுவனங்கள் பல வித்தைகளை கையாள்வதுண்டு. அதில் ஒன்று அவர்களை ஊக்குவிக்க விருதுகள் மற்றும் பரிசுகளை அளிப்பது. HCL நிறுவனம் top performers-க்கு பென்ஸ் கார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2013-வில் இந்த நிறுவனம் 50 பேர்க்கு அத்தைகைய பரிசை வழங்கியது. பிறகு, அதை கைவிட்டு விட்டது. மீண்டும் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
HCL டெக்னாலஜிஸ் தலைமை மனித வள அலுவலர் (CHRO) அப்பராவ் வி.வி கூறுகையில், இந்த திட்டம் வாரியத்தின் (board) ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மாற்று பணியமர்த்தல் செலவு (replacement hiring cost – அதாவது ஒருவர் பணியில் இருந்து விலகினால், வெஒருவரை பணியில் நியமிப்பதற்கான செலவு) காரணமாக இவ்வகை செயல்கள் மேற்கொள்ளப்படுகிறது என்று அப்பராவ் கூறியுள்ளார்.
ஜூலை முதல் HCL சம்பள உயர்வையும் அளித்துள்ளது. மேலும் அந்நிறுவனம் இந்த ஆண்டு 20,000 – 22,000 இளைஞர்களை வேலையில் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. சலுகைகளைச் தர முயற்சிப்பதில் HCL தனியாக இல்லை. BharatPe நிறுவனம் அதன் தொழில்நுட்ப குழுவில் சேரும் ஊழியர்களுக்கு ‘Bike Package’அல்லது ‘Gadget Package’அளிக்கவுள்ளது. அவர்கள் தரும் பட்டியலில் இருந்து ஏதேனும் ஒரு புது பைக் அல்லது கேட்ஜெட்டைப் பெறலாம்.
உங்கள் நிறுவனம் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்திருக்கிறது? அல்லது எதை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள்? என்று கீழே உள்ள comments section-ல் பதிவு செய்யலாம்.
2 Comments
புதிய இணையதளத்திற்கு வாழ்த்துக்கள். மேன்மேலும் வளர்க வாழ்க.
உங்கள் இணைய தளம் அருமை வாழ்த்துக்கள்.