தகுதியான ஆட்களின்றித் தவிக்கும் சைபர் துறை!
இந்தியாவில் போதுமான சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் நாஸ்காம் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக தரவுத் திருட்டு (data theft) அதிகம் நிகழ்ந்து வரும் சூழலில், சைபர் துறை வல்லுனர்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் இதை எதிர்கொள்ள இந்தியா தயாராகவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய சைபர் பாதுகாப்பு சேவைகள் தொழில், 2025 ஆம் ஆண்டுக்குள் $ 13.6 பில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சைபர் செக்யூரிட்டி சர்வீஸ் தொழில் 2019 இல் சுமார் 4.3 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. இது 2022 இல் 7.6 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 2021 ஆம் ஆண்டின் இறுதியில், சைபர் பாதுகாப்புத் துறையில் சுமார் 3.5 மில்லியன் வேலைகள் நிரப்பப்படாமல் இருக்கும்.
இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டியிருக்கு?
நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இதை பற்றி தெரிந்து கொள்ள சிறப்பு படிப்புகள் இருந்தாலும், தாக்குதல் நடந்த பின்னரே பெரும்பாலான நிறுவனங்கள் தீர்வுகளை உருவாக்க முடியும் என்பதால் பயிற்சி ஒரு சவாலாகவே உள்ளது என்கிறார் INKA Entworks குளோபல் வணிகத்தலைவர் கோவிந்த்ராஜ்.
“தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தவிர்ப்பதில் கவனம் தேவை. பாதுகாப்புப் பயிற்சி வல்லுநர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். Ethical hacking பற்றி மேலும் தெரிந்து கொள்வது உதவும்” என்கிறார் கோவிந்த்ராஜ்.
Indeed வேலைவாய்ப்பு போர்ட்டல் ஒன்றின் ஆய்வின்படி, கோவிட் -19 ஐடி-யை தாக்கத் தொடங்கியபோது, மே 2020 இல் சைபர் பாதுகாப்பு வேலைகள் 6 சதவிகிதம் அதிகரித்தது. ஐடி கம்பெனிகளும் தங்கள் இணைய பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய அதிக நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளன.
இந்திய ஐடி துறைக்குப் பணியாளர்கள் பற்றாக்குறை இல்லை, ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் மென்பொருள் பொறியாளர்களை இந்தியா உருவாக்குகிறது. இருப்பினும், சிறப்புத் திறமைனு வரும்போது, தகுதியும், திறமையும் கொண்டவர்களைக் கண்டுபிடிப்பது கடினமாகவுள்ளது என்கிறார் Zaggle (பி 2 பி ஃபின்டெக் நிறுவனம்) மற்றும் ZikZuk (ஒரு neobanking தளம்) நிறுவனர் ராஜ்.
இந்த இடைவெளியைக் குறைப்பது ஒரு சவாலாக இருந்தாலும், இது ஒரு வாய்ப்பும் கூட. “ஆன்லைன் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் வளர்ந்து வரும் பொறியாளர்களுக்கு ஏற்ப தங்கள் பாடங்களை மேம்படுத்த வேண்டும்” என்கிறார். நிறுவனங்கள் பாதுகாப்பு குழுவை உருவாக்குவதில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
எதிர்கால இணையப் பாதுகாப்புக் கோரிக்கைகளுக்குத் தயாராக இருக்கும் பணியாளர்களை இந்தியா உருவாக்கத் தொடங்கும் அதே வேளையில், நிறுவனங்கள் தற்போதுள்ள ஊழியர்களின் திறமையை மேம்படுத்த வேண்டும்.
Credits – Rediff