3% உயர்ந்த டிசிஎஸ்..
ஜே.பி.மார்கன் பரிந்துரையால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பங்குகள் சுமார் 3% உயர்ந்தன. நிறுவனம் பங்கின் நிலையை ‘நியூட்ரல்’ இலிருந்து ‘ஓவர்வெயிட்’ என உயர்த்தியதோடு, இலக்கு விலையை ரூ.3,650-இல் இருந்து ரூ.3,800 ஆக உயர்த்தியுள்ளது. இதன் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் விலை (₹3,054.7) ஒப்பிடுகையில் சுமார் 24.4% உயர்வு சாத்தியம் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜே.பி.மார்கன் இந்த ஆண்டு இதுவரை TCS பங்குகள் நிஃப்டியுடன் ஒப்பிடுகையில் 29% குறைவாகவும், நிஃப்டி ஐடி-யுடன் ஒப்பிடுகையில் 6% குறைவாகவும் செயல்பட்டுள்ளன.
குறைந்த வளர்ச்சி, குறுகிய மார்ஜின் காரணமாக தொடர்ந்து வருமானக் கணிப்புகள் குறைக்கப்பட்டதே இதற்குக் காரணம். அதே நேரத்தில், நிறுவனத்தின் வணிக மாதிரி பாதிக்கப்படவில்லை என்றும், 2026 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி மீண்டும் உயரும் எனவும் நிறுவனம் நம்புகிறது. 2026-இல் நிலையான நாணய அடிப்படையில் வளர்ச்சி 0%, வருடாந்திர அடிப்படையில் 5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மார்ஜின் மதிப்பீடு 55–57 பேஸிஸ் பாயிண்ட் உயர்ந்ததால், EPS-ல் அடுத்த மூன்று ஆண்டுகளில் 2–3% முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது TCS பங்குகள் இரண்டாண்டு முன்பதிவு P/E விகிதத்தில் 19.7 மடங்காக வர்த்தகம் செய்கின்றன. இது ஐந்து ஆண்டு சராசரியைவிட இரண்டு ஸ்டாண்டர்ட் டிவியேஷன் குறைவானது.
சமீபத்தில், சி.இ.ஓ. கே.கீர்த்திவாசன், , சி.இ.ஓ ஆர்த்தி சுப்ரமணியன் ஆகியோர், ஒப்பந்தங்கள் தாமதமாவதும் வாடிக்கையாளர் எச்சரிக்கையான அணுகுமுறையும் சவால்களை உருவாக்கினாலும், நிறுவனத்தின் நீண்டகால பாதை வலுவாக இருக்கும் என உறுதியளித்தனர். கீர்த்திவாசன், ஆர்டர்கள் வலுவாக இருப்பதால் நடுத்தர, நீண்டகாலத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாக CNBC-TV18-க்கு தெரிவித்தார்.
ஜூன் காலாண்டில் TCS வருவாய் 1.6% குறைந்து ரூ.63,437 கோடியாகப் பதிவானது. அமெரிக்க டாலர் அடிப்படையில் வருவாய் 0.6% குறைந்தது.
