டிஜிட்டல் கலை வடிவங்கள் (NFT – ART) – டீனேஜர்கள் பணம் சம்பாதிக்கும் புதிய சந்தை!

ராண்டி ஹிப்பர், ப்ரூக்லின்ல இருக்குற சாவேரியன் உயர் நிலைப் பள்ளில படிச்சிட்டு இருந்தப்ப “கிரிப்டோ உலகத்தைப் பத்தி தெரிஞ்சிக்க ஆசைப்பட்டார், சமூக ஊடக தளங்களில் புதுசா பிரபலம் ஆகிற NFT (Non-Fungible Token) அவரை ரொம்பவே ஈர்க்க ஆரம்பிக்க, 17 வயதான ஹிப்பர் சொந்தமா சில டிஜிட்டல் கலைப்படைப்புகளை வெளியிட ஆரம்பிச்சார், கார்ட்டூன்கள், சுய அறிமுகக் குறிப்புகள், விக்கிப்பீடியாவில் பக்கங்கள், தன்னுடைய காரின் கூம்பு வடிவிலான சக்கரங்கள் என்று விதவிதமாக அவர் படைப்புகளை உருவாக்கி வெளியிட்டார்.
ஹிப்பருக்கு பிறகு ஒரு யோசனை வந்தது, உலகெங்கும் இருக்கிற டிஜிட்டல் கலைஞர்களை ஒருங்கிணைக்க அவர் முயற்சி செஞ்சாரு, இதுல “அஜய் டூன்ஸ்” ங்கிற பேர்ல ஒரு ஆன்லைன் டிஜிட்டல் ஓவியங்கள் விக்கிற ஒரு இந்தியப் பையனையும் அவர் சேத்துக்கிட்டாரு, டிஜிட்டல் கலை வடிவங்களை இவங்க NFT ஆன்லைன் சந்தையான “அட்டாமிக் ஹப்”ல (Atomic Hub) விற்பனை பண்ண ஆரம்பிச்சாங்க.
சரி, இந்த NFT ங்கிறது என்னன்னு சுருக்கமா தெரிஞ்சுக்கோங்க, பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிற ஒரு டிஜிட்டல் ஃபைல் தாங்க இந்த Non-Fungible Token எனப்படும் NFT, கிரிப்டோ கரன்சிகளான வேக்ஸ், எதேர், மிஸ் டீன் மூலமா வாங்கலாம். இந்த டிஜிட்டல் கோப்பை நீங்க காப்பி அடிக்க முடியாது, டூப்ளிகேட் பண்ண முடியாது, டிஜிட்டல் வடிவத்துல மட்டும்தான் இதை நீங்க பரிமாற்றம் செய்ய முடியும். இந்த வடிவங்களில் ஓவியங்கள், கலை வடிவங்கள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுவதுதான் NFT – கலை வடிவங்கள்.
இப்போது வாரத்துக்கு ஒரு கலைப்படைப்பை வெளியிடுகிறார் ஹிப்பர், “மிஸ் டீன்” கிரிப்டோ கரன்சியின் மூலமாக பரிவர்த்தனை செய்கிறார், இப்ப அவருக்கு வயசு 18. “இப்போதைக்கு ரொம்பப் பெரிய அளவுக்குப் போக வேண்டாம்னு முடிவு செஞ்சிருக்கேன், என்னுடைய படைப்புகளை வாங்குபவர்களை ஓவர் லோட் செய்யக்கூடாதுன்னு நினைக்கிறேன்” என்கிறார் ஹிப்பர்.
40 வயதான பீப்பிள் என்பவருடைய ஒரு டிஜிட்டல் கலைப்படைப்பு கிறிஸ்டிங்கிற (Christy) NFT 69 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆனது, ஒருவேளை இது ப்ளூ சிப் கேலரி, புகழ்பெற்ற ஏல அரங்கங்களில் விற்பனை ஆகியிருந்தா இந்நேரம் தலைப்புச் செய்தி ஆகி இருக்கும், ஆனா, NFT சந்தைகளான நெஃப்ட்டி ப்ளாக்ஸ் (Nefty Blocks), ஓபன் ஸீ (Open Sea) போன்றவை பெரும்பாலும் சமூக ஊடகங்களில் மட்டுமே விளம்பரம் செய்யப்படுது.
“நிஃப்ட்டி கேட்வே” (Nifty Gateway) என்கிற ஒரு NFT -யின் புதிய சந்தையை கண்டுபிடித்து அறிமுகம் செய்த கிரிஃபின் காக் பாஸ்டர் என்கிற நியூயார்க்கில் வாழும் 26 வயது இளைஞர் சொல்கிறார், “NFT – உலகத்தில் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் படைப்புகளை வெளியிடலாம், நீங்களே டிவிட்டர் மற்றும் பல சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யலாம்”.
டங்கன் எனும் டிஜிட்டல் படைப்பாளி என்ன சொல்றார்னா, “”டிக் டாக்” செயலி எப்படி பல இளைஞர்களின் திறமையை உலகுக்கு அறிமுகம் செய்ததோ, அதேபோலவே இதுவும் இளைஞர்களின் சொர்க்கம்”.
ஜூன் மாதத்தில் நிஃப்டி கேட்வே “நிஃப்ட்டி அடுத்த தலைமுறை” என்ற ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தியது, இதுல JSTN Graphics அப்படீங்கிற பெயரில் படைப்புகளை வெளியிடும் 17 வயதான வாஷிங்டனில் வாழும் இளைஞனும், சோலேஸ் என்கிற சோல்டேட் நகரைச் சேர்ந்த இளைஞனும் பெரிய அளவில் அறிமுகமானார்கள், ஏற்கனவே சூப்பர் ரேர் என்கிற NFT சந்தையில் தங்களோட படைப்புகளை கடந்த ஒரு வருஷமா இவங்க விக்கிறாங்க, சராசரியா இவங்களோட படைப்புக்கள் 1000 டாலரில் இருந்து 7250 டாலர் வரை விலை போகிறது.
“சும்மா என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு தான் உள்ள வந்தேன், சூப்பர் ரேருக்குள் (Super Rare) வந்தபிறகு, இப்போ என் காட்டுல மழை பெய்யுது” என்கிறார், இயற்கை நிலப்பரப்புகளை டிஜிட்டலில் படைக்கும் ட்ரோன் ஸ்டைல் (Tron Style) டிஜிட்டல் கலைஞர் ஜஸ்டின் போட்னார்.
NFT – உலகில் இளையவரும், மிகவும் புகழ் பெற்றவருமான விக்டர் லேங்லாயிஸ், ஒரு மூன்றாம் பாலினத்தவர், ஃபெவோசியஸ் அல்லது ஃபெவோ எனும் பெயரில் இவரது ரசிகர்களால் அறியப்படுகிறார், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துயரங்களை, பாலின அடையாளம் சார்ந்த சிக்கல்களை இவர் ஓவியங்களாக வரைகிறார்.
மொதல்ல சூப்பர் ரேர்ல தன்னோட படைப்புகளை விற்றுக்கொண்டிருந்தவர், பிறகு நிஃப்டி கேட்வேயில் நுழைந்தார், டிஜிட்டல் ஓவியங்களின் கிறிஸ்டி சந்தை நிபுணரான நோவா டேவிஸ் இவரோட ஓவியங்களைப் பார்த்துவிட்டு ஜூன் மாசத்துல ஒரு ஏலத்துக்கு ஏற்பாடு செஞ்சாரு, அந்தக் கண்காட்சிக்குப் பெயர் “என் பெயர் விக்டர் (ஃபெவோசியஸ்), இது என்னுடைய வாழ்க்கை”, சக்கைப்போடு போட்ட கண்காட்சி 2.16 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில 20,16,000) சம்பாதித்தது.
இது ஒரு புதிய சந்தை, கலை வடிவங்களை டிஜிட்டல் தளத்துக்கு எடுத்துக் கொண்டு போகும் வழி, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ரொம்ப வேகமா வளர்கிற டீனேஜர்களின் சொர்க்கம், பணத்துக்குப் பணம், கலைக்கு கலை, இதுதான் NFT – கலை வடிவங்களின் தாரக மந்திரம்.