உங்கள் நிலத்தை பதிவு செய்ய சிரமப்படுகிறீர்களா? கவலைப்படாதே சகோதரா, விரைவில் ஒரு எளிய தீர்வு!
நீங்கள் வாங்க நினைக்கும் நிலம் ஏதேனும் சட்ட சிக்கல்களில் உள்ளதா (legal dispute) என்பதை அறிந்து கொள்ளும் வகையில் நில ஆவணங்களை (land documents) இணைய நீதிமன்றங்களுடன் (e-courts) இணைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, இதுவரை மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள நில ஆவணங்கள் தொடர்புள்ள இணைய நீதிமன்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
நில ஆவணங்களை இணைய நீதிமன்றங்களோடு இணைப்பது அதிகப்படியான அலுவலகப் பணிகளை குறைக்கவும், பல்வேறு சட்ட சிக்கல்களை நீக்கவும், நீதிமன்ற செயல்பாடுகளின் வேகத்தை அதிகப்படுத்தவும் உதவும் என்று ஒன்றிய அரசு கருதுகிறது.
நீதி மற்றும் சட்டத்துறை அமைச்சகம் (Department of Justice in the Law Ministry), விரைந்து மாநில அரசுத்துறைகளுக்குத் தேவையான அனுமதிகளை வழங்கவும், பதிவு தொடர்பான தகவல்களை வழங்கவும், அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமைப் பதிவாளர்களை (registrars general) கேட்டுக் கொண்டுள்ளது. இணைய நீதிமன்றங்கள், மற்றும் தேசிய நீதிமன்ற தகவல் ஆணையம் (National Judicial Data Grid) விரைந்து செயல்பட்டு நிலத் தகராறுகளை (property disputes) உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவும் கேட்டுக்கொண்டுள்ளது
நீதி மற்றும் சட்டத்துறை அமைச்சகம், இதுவரை 8 மாநில உயர் நீதிமன்றங்கள் இது தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி இருப்பதாகத் தெரிவிக்கிறது – திரிபுரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மிசோராம், நாகலாந்து மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம்.
சுலபமாகவும் வெளிப்படையாகவும் சொத்துக்களை பதிவு செய்வதை மிக முக்கியமாக கருதுகிறது உலக வங்கி (World Bank). ஒரு நாடு இதை சரி செய்தால் அல்லது சீரமைத்தால், உலக வங்கி நடத்தும் Ease of Doing Business (EoDB) Index சர்வேயில் சிறப்பான இடத்தை பெறலாம்.
1 Comment
Thank you for the information.