HCL Q2 :பிரிஸ்கா?? ரிஸ்கா??..புஸ்கா??
உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளையும் மீறி, 2025 ஜூலை-செப்டம்பர் காலாண்டில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வருவாய் வளர்ச்சியை HCL டெக்னாலஜிஸ் பெற்றுள்ளது. நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்களில், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் வருவாய் ஈட்டியுள்ள முதல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான HCL, இந்த காலாண்டில் $364 கோடியை ஈட்டி, தொடர்ச்சியாக 2.8% வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது ப்ளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் பங்கெடுத்த 31 ஆய்வாளர்களின் $354 கோடி முன் கணிப்பை முறியடித்துள்ளது. காலாண்டில் அதன் நிகர லாபம் தொடர்ச்சியாக 8% அதிகரித்து $48.6 கோடியாக உயர்ந்துள்ளது.
மிக நவீன ரக AI மூலம் $10 கோடி வருவாயைப் பதிவு செய்து, இந்தத் துறையில், இந்தியாவின் ஐடி அவுட்சோர்சிங் நிறுவனங்கள் வரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது.
HCL Techக்கு முன்பு, AI இலிருந்து வருவாயை அறிவித்த ஒரே பெரிய ஐடி அவுட்சோர்சர், ஆக்சென்ச்சர் மட்டுமே. உலகின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான அக்சென்ச்சர், AI தொழில்நுட்பத்திலிருந்து $270 கோடி வருவாயைப் பெற்றது, இது கடந்த நிதியாண்டில் HCL இன் மொத்த வருவாயில் ஐந்தில் ஒரு பங்காகும்.
இந்த காலாண்டில் HCL Tech இன் வளர்ச்சியின் பெரும்பகுதி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து வந்தது. இது $9.9 கோடி அளவிலான கூடுதல் வருவாயில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. புவியியல் அடிப்படையில், இந்நிறுவனத்தின் கூடுதல் வருவாயில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து வந்ததுள்ளது. அதன் வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட அளவு அமெரிக்காவில் இருந்து வந்துள்ளது
