டாடா மோட்டார்ஸின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் “டிகோர்” அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
டாடா மோட்டார்ஸ் அதன் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனமான டிகோர்- ஐ (Tigor) புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஷோ-ரூம்கள் மற்றும் இணையத்தில் டிகோர்ரை ₹21,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம். டிகோரின் விற்பனை ஆகஸ்ட் 31-ம் தேதியிலிருந்து தொடங்கும்.
டிகோரினால் 5.7 வினாடிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட முடியும். ஃபாஸ்ட் சார்ஜிங் (50 kW) மூலமாக ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்ற முடியும்; ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ வரை பயணிக்க இயலும். உங்கள் வீடுகளிலேயே சார்ஜ் ஏற்றும் வசதி செய்து கொள்ளமுடியும். இம்மாதிரியான ஹோம் சார்ஜிங் முறையில் 8.5 மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்ற முடியும். பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வாரண்டி உள்ளது. பேட்டரியின் ஆயுள் காலத்தில் 1.60 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும்.
விலை, நிறம் ஆகியவை பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு டாடா நெக்ஸான் ஈவி (Nexon EV) எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிட்டது. இந்த காரின் வெற்றியால் இப்போது இரண்டாவது மாடலான டிகோர் வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாகனங்களுக்கு இந்தியா தயாராகி வருவதுடன், மின்வாகன சந்தை இப்போது வளர்ந்தும் வருகிறது. மின்வாகனத் துறை விரைவில் ஒரு பெரிய சந்தையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிகோரின் விலை ₹13.99 லட்சத்திலிருந்து ₹16.85 லட்சம் வரை இருக்கலாம். இந்த விலையிலிருந்து மேற்கொண்டு தள்ளுபடிகள் இருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.