19 %வீழ்ந்த டாடா கன்சியூமர் லாபம்.,
கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவுகளை டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நிறுவனத்தின் லாபம் 217 ரோடி ரூபாயாக 4 ஆவது காலாண்டில் பதிவாகியுள்ளது. இது கடந்தாண்டு(2023) 4ஆவது காலாண்டைவிடவும் 19 விழுக்காடு குறைவாகும். குறிப்பிட்ட அந்த காலாண்டில் இதே நிறுவனத்தின் லாபம் 269 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டின் நிலவரப்படி டாடா கன்சியூமர் நிறுவனத்தின் வருவாய் 8.5 விழுக்காடு உயர்ந்து 3927 கோடி ரூபாயாக உள்ளது. வருவாய் அதிகமாக இருந்தபோதிலும் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இது குறித்து டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் டிசோசா பேசியுள்ளார்.
விற்பனை கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளதாக கூறியுள்ள அவர், 40 லட்சம் கடைகளுக்கு தங்கள் பொருட்கள் சென்றுள்ளதாகவும், இணையதளத்தில் விளம்பரப்படுத்தும் அதே நேரம் கிராமபுறங்களையும் குறைவைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். டாடா கன்சியூமர்ஸ் நிறுவனத்தின் மின்வணிக சேனல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக காஃபியில் அதிக வருவாய் கிடைத்து வருகிறது. 10 லட்சம் பேர் வசிக்கும் நகரங்களை குறிவைத்து 1300க்கும் அதிகமான விநியோகஸ்த கிளையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட காலாண்டில் டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது 29 கிளைகளை 6 நகரங்களில் திறந்துள்ளது. இதன்மூலம் நடப்பாண்டில் டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் காபி கடைகளின் எண்ணிக்கை 95 ஆகவும், மொத்த கடைகளின் எண்ணிக்கை 61 நகரங்களில் 421 ஆகவும் உயர்ந்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையில் டாடா கன்சியூமர் புராடகட்ஸ் நிறுவனத்தின் பங்கு 0.07 விழுக்காடு உயர்ந்து விற்பனையானது குறிப்பிடத்தக்கது.