மேலும் உயருமா தங்கம் விலை..?
அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் அண்மையில் தங்கம் விலை இன்னும் எவ்வளவு உயரும் என்ற ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 2025 தொடங்கத்தில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 2,900 அமெரிக்க டாலராக உயரும் என்று கணித்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் குறுகியகால கடன் விகிதங்கள் குறைந்து வருவதாலும், சீனாவிலும் இதே நிலை தொடர்வதாலும் தங்கம் விலை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. பல்வேறு நாட்டு மத்திய வங்கிகள் அதிகளவில் தங்கம் வாங்கிக்குவித்து வருவதும் முக்கிய காரணியாக கூறப்படுகிறது. கடந்த 2022 முதல் இந்த நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. கடந்த ஜூலையில் மட்டும் சராசரியாக 730 டன் அளவுக்கு தங்கம் லண்டனில் வாங்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பிரச்சனைகள், பொருளாதார மற்றும் வேலையிழப்பு அச்சம் ஏற்படும்போதெல்லாம் தங்கத்தின் விலை உச்சம் பெற்றுக்கொண்டே உள்ளது. அண்மையில் அமெரிக் பெடரல் ரிசர்வ் தனது கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்ததால் முதலீடுகள் தங்கத்தின் மீது செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களிலும் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகள் தரப்படவில்லை.