பெரிய ஆட்டம் போட்டு வரும் தங்கம் விலை..
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. டெல்லி, சண்டிகர், லக்னோ,ஜெய்ப்பூர் உள்ளிடட பகுதிகளில் 10 கிராம் தங்கம் 76,000 ரூபாயாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைத்ததும் இதற்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2630 அமெரிக்க டாலர்களாக உச்சம் தொட்டுள்ளன. அமெரிக்க தங்க ஃபியூச்சர்ஸ் முதலீடுகள் ஒரு அவுன்ஸ் 2653 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஹெஸ்பொல்லா-இஸ்ரேல் இடையேயான மோதலும் தங்கம் விலை உயர முக்கிய காரணியாக அமைந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் மேலும் வட்டி விகிதத்தை குறைக்கும்பட்சத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தின் மீது முதலீடுகள் செய்ய இருப்பதாகவும் முதலீட்டு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.