இன்றைய சந்தை நிலவரம்…
வாரத்தின் கடைசி வர்த்தக தனமான இன்று இந்திய பங்குச் சந்தைகள் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் அதிகரித்து 59 ஆயிரத்து 956 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 886 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை என்று 60,000 புள்ளிகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.
அதானி போர்ட்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், இண்டஸ் இன் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் மூன்று சதவீதத்திற்கும் மேல் இன்று அதிகரித்துள்ளன.