Latest:
செப். 1 முதல் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் விலை ரூ. 25,000 வரை உயர்வுNRI வைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே ரத்து செய்தது ஏன்?The Credibility Cost: Analyzing the RBI’s Premature Termination of the NRI Deposit Schemeவணிக வாகனங்களைத் தயாரிக்க பால்வால் ஆலையை விரிவுபடுத்தும் யூலர் மோட்டார்ஸ்ஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடுஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்செப். 1 முதல் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் விலை ரூ. 25,000 வரை உயர்வுNRI வைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே ரத்து செய்தது ஏன்?The Credibility Cost: Analyzing the RBI’s Premature Termination of the NRI Deposit Schemeவணிக வாகனங்களைத் தயாரிக்க பால்வால் ஆலையை விரிவுபடுத்தும் யூலர் மோட்டார்ஸ்ஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடுஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்

செய்தி

மீண்டெழுந்த சந்தைகள்…

இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான சூழல் காரணமாக, முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.
புதன்கிழமை காலையில் வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நல்ல முன்னேற்றம் கண்டது. மாலையில் சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்ந்து 73 ஆயிரத்து 730 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. இதேபோல், கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, புதன்கிழமை 254 புள்ளிகள் உயர்ந்து, 22 ஆயிரத்து 337 புள்ளிகளாக வர்த்தகம் முடிவுற்றது. அதானி துறைமுகம், பவர் கிரிட், டாடா ஸ்டீல்ஸ், அதானி என்டர்பிரைசஸ் நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎப்சி வங்கி, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை குறைந்து முடிந்தன
பொதுத்துறை வங்கிகள், ஊடகம், தொலைத்தொடர்பு, உலோகம் மற்றும் ஆற்றல் துறை பங்குகள் தலா 3 விழுக்காடு அளவுக்கு உயர்ந்தன. இதேபோல், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக நேற்றும் உயர்ந்தது. திங்கட்கிழமை ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம், அடுத்த நாளே சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, 64 ஆயிரத்து 80 ரூபாயாக விற்கப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை ஒரு சவரன் விலை 440 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி, ஒரு கிராம் 107 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி மற்றும், கடைக்கு கடை மாறும் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *