Tata capital – வரவேற்பு இல்லை ?
டாடா கேபிடலின் முதல் கட்ட பொதுப் பங்கு வெளியீடு (IPO) தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 40 சதவீத பங்குகள் கொள்முதல் செய்யப்பட்டன.
நேற்று ₹4,200 கோடி மதிப்புள்ள 12.9 கோடி பங்குகள் ஏலத்தில் எடுக்கப்பட்டன. IPOவின் நிறுவன முதலீட்டாளர் பகுதியில் 52 சதவீதம் விற்பனை ஆனது. உயர் நிகர மதிப்புள்ள தனிநபர் பகுதி பங்குகள் 30 சதவீமும், சில்லறை விற்பனைப் பகுதி பங்குகள் 35 சதவீதமும் விற்பனையாகின. IPO கிட்டத்தட்ட 700,000 விண்ணப்பங்களை ஈர்த்ததுள்ளது.
வெள்ளிக்கிழமை, டாடா குழும நிறுவனம் ₹4,641 கோடி மதிப்புள்ள 14.24 கோடி பங்குகளை anchor முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கியது. பங்குகள் ஒவ்வொன்றும் ₹326 விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
முக்கியமான anchor முதலீட்டாளர்களில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) 2.14 கோடிக்கும் அதிகமான பங்குகளை ₹700 கோடிக்கு பெற்றது. ICICI புருடென்ஷியல் MF, HDFC MF, ஆதித்யா பிர்லா சன் லைஃப் MF மற்றும் DSP MF உள்ளிட்ட மியூச்சுவல் ஃபண்ட் (MF) பங்கேற்பாளர்களும், மோர்கன் ஸ்டான்லி, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் மிச்சிகன் மாநில ஓய்வூதிய அமைப்பு போன்ற வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் நங்கூரப் பிரிவில் ஏலம் எடுத்தனர்.
பங்கு விலைக்கான உச்ச வரம்பின் அடிப்படையில், டாடா கேபிடலின் மதிப்பு ₹1.38 லட்சம் கோடியாக, அதன் புத்தக மதிப்பை விட 3.5 மடங்கு அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. டாடா கேபிடலின் ₹15,512 கோடி மதிப்புள்ள IPO உள்நாட்டு சந்தையில் நான்காவது பெரிய IPOஆக உள்ளது.
IPOஐத் தொடர்ந்து, டாடா கேபிடலில், அதன் நிறுவனர்களின் பங்குகள், 95.6 சதவீதத்திலிருந்து 85.5 சதவீதமாகக் குறையும்.
