மஹிந்திரா குழுமம் திட்டவட்டம்…!!
மஹிந்திரா குழுமம், அதன் ஆட்டோமொபல்ஸ் மற்றும் டிராக்டர் வணிகங்களை தனி நிறுவனங்களாக மூன்றாக பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியது. இது பற்றி தளங்களில் வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
மஹிந்திரா குழுமம் அதன் முக்கிய உற்பத்தி பிரிவுகளான டிராக்டர்கள், பயணிகள் வாகனங்கள் (EVகள் உட்பட) மற்றும் லாரிகள் ஆகியவற்றை தனி நிறுவனங்களாகப் பிரிக்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஆட்டோமொபைல்ஸ் மற்றும் டிராக்டர் வணிகங்களைப் பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்பதை பங்குச் சந்தைகளுக்கு தெளிவுபடுத்துவது அவசியம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களிலும் இதை தெளிவுபடுத்தியுள்ளோம் என்றும், இந்த வணிகங்களை M&M நிறுவனத்திற்குள் வைத்திருப்பதன் மூலம் கூட்டு இயக்கத்தினால் (synergy) குழுமத்தின் செயல் திறனை அதிகரித்து, வருவாய்களை அதிகரிக்க முடிவதாக கூறியுள்ளது
