22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

14.3% லாபம்

2025-26-இன் இரண்டாவது காலாண்டில், செலவுக் குறைப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காரணமாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் (HMIL) ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 14.3 சதவீதம் அதிகரித்து, ரூ.1,572 கோடியாக உயர்ந்துள்ளது.

இரண்டாவது காலாண்டில் HMIL மொத்தம் 51,400 யூனிட்களை ஏற்றுமதி செய்து, ஏற்றுமதிகளில் 21.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதே காலாண்டில் அதன் உள்நாட்டு விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 6.8 சதவீதம் குறைந்து 139,521 யூனிட்களாக குறைந்துள்ளது.

“எங்கள் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் வலுவான டிமாண்ட் எற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க சந்தைகளில் 35% வளர்ச்சியும், மெக்சிகோவில் 11% வளர்ச்சியும் பதிவாகியுள்ளது” என்று HMIL இன் நிர்வாக இயக்குனர் உன்சூ கிம் கூறியுள்ளார்.

மொத்த வருமானம் 2026 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 1.4 சதவீதம் அதிகரித்து ரூ.17,692 கோடியாக இருந்தது.

HMIL இன் தலைமை இயக்க அதிகாரி தருண் கார்க், ஹுண்டாய் நிறுவனம் எப்போதும் விற்பனையின் தரத்தை பராமரித்து வருகிறது என்று குறிப்பிட்டார் GST மாற்ற காலத்தில் (ஆகஸ்ட் 15–செப்டம்பர் 21) விற்பனை குறைவாக இருந்த போதும் HMIL எந்த விலை தள்ளுபடியையும் வழங்காத நிறுவனம் என்று அவர் கூறினார். அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் HMIL இன் MD மற்றும் CEO ஆக கார்க் பதவியேற்க உள்ளார்.

செப்டம்பர் 22 முதல் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளதாக கார்க் கூறினார். ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையிலான சராசரி மாதாந்திர விற்பனையுடன் ஒப்பிடும்போது செப்டம்பர்-அக்டோபர் காலகட்டத்தில் HMIL இன் மாதாந்திர சில்லறை விற்பனை 20 சதவீதம் வளர்ந்துள்ளது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *