தங்கம்: அடுத்த அதிர்ச்சி: ஒரு கிராம் ₹19,000 ???
பல ஆண்டுகளாகத் தொடரும் தங்க விலை உயர்வு தணிவதற்கான அறிகுறிகள் குறைவாகவே தென்படுகின்றன என்றும், 2026 ஆம் ஆண்டு வரையிலும் விலைகள் உயர்ந்த நிலையிலேயே நீடிக்க வாய்ப்புள்ளதுடன், ஒரு அவுன்ஸ் தங்கம் 6,000 டாலரை (சுமார் ஒரு அவுன்ஸுக்கு ₹541,920 மற்றும் 10 கிராமுக்கு ₹1.90 லட்சம்) நெருங்கக்கூடும் என்றும் உலக தங்க கவுன்சிலின் தலைமைச் செயல் அதிகாரி டேவிட் டைட் தெரிவித்துள்ளார். ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 28 கிராம் எடை கொண்டதாகும்.
“2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன,” என்று டைட் கூறினார். “பலர் 6,000 டாலர் வரை விலை உயரும் என்று கணித்துள்ளனர், தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும் போது, அந்த தொகை சாத்தியமானதாகவே தெரிகிறது” என்றார்.
புதன்கிழமை அன்று, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,321 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது, இது கடந்த ஆண்டை விட 60% அதிகமாகும்.
இந்த விலை உயர்வானது குறுகிய கால அதிர்ச்சிகளால் அல்லாமல், பல அடிப்படை கட்டமைப்பு சக்திகளால் உந்தப்படுகிறது என்று டைட் கூறினார். இதில் சீனாவில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் பற்றிய எதிர்பார்ப்புகள், ஜப்பானில் அடுத்த தலைமுறைக்கு பெரிய அளவிலான செல்வப் பரிமாற்றம், ஈடிஎஃப் (ETF) நிதிகள் மற்றும் இதர தங்க முதலீட்டுத் தயாரிப்புகளின் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவை அடங்கும்.
இந்த நிலையில் தங்க விலையேற்றம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பது பற்றி பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பேசிய சிறிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
