Latest:
மெக்கார்மிக் -யூனிலீவர் இணைப்பால் வேலை இழப்பா??Sproutlife நிறுவனத்தை கையக்கப்படுத்திய ITC நிறுவனம்விப்ரோ ஏ.ஐ பிரிவின் CEOஆக நாகேந்திர பண்டாரு நியமனம்2025-26இல் புதிய உச்சத்தை எட்டிய கார்கள் விற்பனைஆரக்கிளின் மறுசீரமைப்பு: இந்தியாவில் பெருமளவிலான ஆட்குறைப்பு மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமைOracle's Restructuring Amid AI Push: Mass Layoffs in India and Rising Debt Concernsமின்சார பேருந்து துறையில் டாடா மோட்டர்ஸை விஞ்சிய ஸ்விட்ச் மொபிலிட்டிஇரு மடங்காக உயர்ந்த விமான எரிபொருள் விலைகள்சரக்கு கப்பல் கட்டண உயர்வினால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு2 தனியார் வங்கிகளின் ரூ.590 கோடி மோசடி வழக்கை சி.பி.ஐ விசாரிக்க பரிந்துரைமெக்கார்மிக் -யூனிலீவர் இணைப்பால் வேலை இழப்பா??Sproutlife நிறுவனத்தை கையக்கப்படுத்திய ITC நிறுவனம்விப்ரோ ஏ.ஐ பிரிவின் CEOஆக நாகேந்திர பண்டாரு நியமனம்2025-26இல் புதிய உச்சத்தை எட்டிய கார்கள் விற்பனைஆரக்கிளின் மறுசீரமைப்பு: இந்தியாவில் பெருமளவிலான ஆட்குறைப்பு மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமைOracle's Restructuring Amid AI Push: Mass Layoffs in India and Rising Debt Concernsமின்சார பேருந்து துறையில் டாடா மோட்டர்ஸை விஞ்சிய ஸ்விட்ச் மொபிலிட்டிஇரு மடங்காக உயர்ந்த விமான எரிபொருள் விலைகள்சரக்கு கப்பல் கட்டண உயர்வினால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு2 தனியார் வங்கிகளின் ரூ.590 கோடி மோசடி வழக்கை சி.பி.ஐ விசாரிக்க பரிந்துரை

உள்நாட்டு செய்திகள்

டாப் 6 பங்கு விலைகள் சரிந்ததால் ஒரு வாரத்தில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு

கடந்த வாரம், டாப் 10 நிறுவனங்களில், ஆறு நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக சரிந்தது. ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் பங்கு விலைகள் மிகப் பெரிய சரிவை எதிர்கொண்டன.

கடந்த வாரத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 953.64 புள்ளிகள் குறைந்து, 1.14 சதவீதம் சரிந்தது.

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய பங்குகள் சரிவை சந்தித்தன. அதே நேரத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை உயர்ந்தன.

டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.90,198.92 கோடி சரிந்து, ரூ.9,74,043.43 கோடியாகவும், இன்ஃபோசிஸின் மதிப்பீடு ரூ.70,780.23 கோடி சரிந்து ரூ.5,55,287.72 கோடியாகவும் இருந்தது.

HDFC வங்கியின் சந்தை மதிப்பீடு ரூ.54,627.71 கோடி குறைந்து ரூ.13,93,621.92 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பீடு ரூ.41,883 கோடி குறைந்து ரூ.19,21,475.79 கோடியாகவும் உள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சந்தை மதிப்பு (mcap) ரூ.23,971.74 கோடி குறைந்து ரூ.5,46,226.80 கோடியாகவும், பாரதி ஏர்டெல்லின் சந்தை மதிப்பு ரூ.19,244.61 கோடி குறைந்து ரூ.11,43,044.03 கோடியாகவும் உள்ளது. இருப்பினும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) சந்தை மதிப்பீடு ரூ.1,22,213.38 கோடி உயர்ந்து ரூ.11,06,566.44 கோடியாக உள்ளது.

பஜாஜ் ஃபைனான்ஸின் சந்தை மதிப்பு ரூ.26,414.44 கோடி உயர்ந்து ரூ.6,37,244.64 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் லார்சன் & டூப்ரோவின் சந்தை மதிப்பு ரூ.14,483.9 கோடி அதிகரித்து ரூ.5,74,028.93 கோடியாக உயர்ந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.5,719.95 கோடி அதிகரித்து ரூ.10,11,978.77 கோடியாக உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பில் முதலிடத்தில் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து HDFC வங்கி, பாரதி ஏர்டெல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *