Latest:
என்விடியா சிப்களை வாங்க 4,000 கோடி டாலர் கடன் வாங்கும் ஸ்பேஸ்எக்ஸ்சட்டச் சிக்கலை எதிர்கொள்ளும் டிரம்பின் $100,000 H-1B கட்டணத் திட்டம்பௌதீக AIஐ செயற்கை நுண்ணறிவின் அடுத்த அத்தியாயம் எனக் கூறும்ஆனந்த் மஹிந்திராமாதம் 1,00,000 பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டம்மதிப்பீடு, இலக்கு விலையை Citi உயர்த்திய பின் ITC பங்குகள் 5% உயர்வுசெலவை 20% குறைக்கவும், விரைவாகக் கார்களை உருவாக்கவும் ஹோண்டா இலக்குகடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த யூரோ மதிப்புநியமிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமான தங்க இறக்குமதிகள் ஜிஎஸ்டியின் கீழ் வர வாய்ப்புசுங்க வரி குறைப்பினால், சோயா, சமையல் எண்ணெய் விலைகளில் ஏற்படும் தாக்கங்கள்India’s Edible Oil Duty Cuts: Implications for Soy Production, Cooking Oil and Downstream Pricesஎன்விடியா சிப்களை வாங்க 4,000 கோடி டாலர் கடன் வாங்கும் ஸ்பேஸ்எக்ஸ்சட்டச் சிக்கலை எதிர்கொள்ளும் டிரம்பின் $100,000 H-1B கட்டணத் திட்டம்பௌதீக AIஐ செயற்கை நுண்ணறிவின் அடுத்த அத்தியாயம் எனக் கூறும்ஆனந்த் மஹிந்திராமாதம் 1,00,000 பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டம்மதிப்பீடு, இலக்கு விலையை Citi உயர்த்திய பின் ITC பங்குகள் 5% உயர்வுசெலவை 20% குறைக்கவும், விரைவாகக் கார்களை உருவாக்கவும் ஹோண்டா இலக்குகடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த யூரோ மதிப்புநியமிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமான தங்க இறக்குமதிகள் ஜிஎஸ்டியின் கீழ் வர வாய்ப்புசுங்க வரி குறைப்பினால், சோயா, சமையல் எண்ணெய் விலைகளில் ஏற்படும் தாக்கங்கள்India’s Edible Oil Duty Cuts: Implications for Soy Production, Cooking Oil and Downstream Prices

உள்நாட்டு செய்திகள்

மாதம் 1,00,000 பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டம்

உள்நாட்டில் வலுவான தேவை நிலவும் சூழலில், புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி சந்தையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. இதையொட்டி, அடுத்த நிதியாண்டு முதல் மாதம் 1,00,000 வாகனங்கள் வரை உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்குமாறு அதன் சப்பளையர்களிடம் இந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் துறை சார்ந்த இரண்டு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மூன்று மாதங்களாக மாதம் சுமார் 75,000 பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வந்தாலும், சப்பளையர்களிடம் உள்ள உற்பத்தித் திறன் சார்ந்த கட்டுப்பாடுகள் காரணமாக முழுமையாக உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை என்று அந்த அதிகாரிகளில் ஒருவர் கூறினார்.

மாதம் 1,00,000 வாகனங்கள் என்ற இந்த உற்பத்தி இலக்கானது, 2026-27 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இருந்த சராசரி மாத விற்பனையான 65,000 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 50%-க்கும் அதிகமான வளர்ச்சியைக் குறிக்கிறது.

உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான இந்த முடிவு, கடந்த மாதம் புனேவில் நடைபெற்ற விநியோகஸ்தர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது என்று அந்த அதிகாரிகள் கூறினர். 2030-31 நிதியாண்டுக்குள் இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தையில் 20% பங்கை அடைவதையும், ஆண்டுக்கு 12 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்வதையும் டாடா மோட்டார்ஸ் இலக்காகக் கொண்டுள்ளது; இதற்காக 2026-27 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்தில் ₹37,500 கோடி முதல் ₹40,000 கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இக்காலகட்டத்தில் நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தித் திறன் 13 லட்சம் வாகனங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் மாதம் 1,00,000-க்கும் மேற்பட்ட பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்ட நிறுவனங்களில், மாருதி சுஸுகிக்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. மாருதி சுஸுகி 16 ஆண்டுகளுக்கு முன்பே அந்த மைல்கல்லைக் கடந்ததுடன், மே 2010-ல் முதன்முறையாக 1,00,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்தது. “அடுத்த ஆண்டில் பல புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனத்துடனான இடைவெளியைக் குறைக்கும் வகையிலான அடுத்தகட்ட வளர்ச்சிக்கான ஆயத்தப் பணிகளை நிறுவனம் தொடங்கியுள்ளது” என்று மேற்கூறிய அதிகாரி தெரிவித்தார்.

டாடா மோட்டார்ஸ் ஒவ்வொரு மாதமும் சராசரியாக விற்பனை செய்து வரும் 65,000 கார்களை விட, தேவை 7,000 முதல் 8,000 வரை அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *