அமெரிக்காவின் ஃபெட் வங்கியின் பிராந்திய ஊழியர்களுக்கு சம்பளவு உயர்வு குறைப்பு
வாஷிங்டனில் உள்ள ஃபெடரல் ரிசரவ் வங்கியின் நிர்வாகக் குழு, மத்திய வங்கியின் 12 பிராந்திய வங்கிகளில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும், சம்பள உயர்வுக்கான மிகவும் குறைவான பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது என இந்த விவகாரம் குறித்து அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பள உயர்வுக்காக அங்கீகரிக்கப்பட்ட நிதியானது, இந்த ஆண்டு 3% ஆக இருந்த சம்பள உயர்வை, அடுத்த ஆண்டு இந்த அமைப்பு முழுவதும் குறைந்தபட்சம் 1% ஆக குறைக்கும் என்று பிராந்திய வங்கி அதிகாரிகள் புதன்கிழமை தங்கள் ஊழியர்களிடம் தெரிவித்தனர். இந்த ஆண்டு 1% சம்பள உயர்வு பெற்ற வாஷிங்டனில் உள்ள ஃபெட் வங்கி ஊழியர்கள், அடுத்த ஆண்டும் இதே போன்ற உயர்வுகளைப் பெறுவார்கள். 2024-ல் ஃபெட் அமைப்பில் சுமார் 24,000 பேர் பணிபுரிந்தனர்.
அடிப்படை சம்பள உயர்வுக்கான பட்ஜெட்டுகள் குறைவாகவும், ஆண்டு பணவீக்கத்திற்குக் கீழாகவும் இருந்தாலும், அதிக தேவை உள்ள அல்லது நிரப்புவதற்கு கடினமான பதவிகளுக்கான ஊக்க ஊதியம் மற்றும் தக்கவைப்பு போனஸ்களுக்காக ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு ஒரு பெரிய நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் கெவின் வார்ஷின் கீழ் இது முதல் ஆண்டு பட்ஜெட் ஆகும். இதற்கு முன்னர், பல ஆண்டுகளாகப் பணியாளர் விலகல்/முன்கூட்டிய ஓய்வு மூலம் ஆட்குறைப்பு மற்றும் வாஷிங்டன் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப் பணியாளர்களில் திட்டமிடப்பட்ட குறைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உச்சவரம்பு, ஊழியர்களின் செயல்திறன் குறித்த எதிர்மறையான மதிப்பீட்டைக் காட்டிலும், இயக்குநர் குழுவின் வரவுசெலவுத் திட்ட வழிகாட்டுதலையே பிரதிபலிக்கிறது என்று வங்கித் தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
