22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

உச்சத்தில் இருந்து வீழ்ச்சியடைந்த தங்கம் விலை

ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.7,600 குறைந்த நிலையில், இன்றும் மீண்டும் ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தில் தான் இருக்கும் நிலையில், ஜனவரி 29ஆம் தேதி வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 அதிகரித்து, ரூ.1,34,400ஆக புதிய உச்சத்தை எட்டியது.


ஈரான், வெனிசூலா ஆகிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் மீது அமெரிக்கா ராணுவ அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளதாலும், பல்வேறு வளர்ந்த நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் அதீத அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கும் போக்கினாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலும், பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு மாறி வருகின்றனர். இதனால் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள், அமெரிக்க டாலரை விற்று தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியிருக்கின்றன. இதனால் தொடர் விலையேற்றம் காணப்பட்டாலும், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ளது.நேற்று (ஜன 30) தங்கம் விலை கிராமுக்கு ரூ. 950 குறைந்து ரூ. 15,850க்கு விற்பனையான நிலையில், இரண்டாவது நாளாக இன்று மீண்டும் கிராமுக்கு ரூ. 950 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து ரூ. 1,26,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரூ. 7,600 குறைந்து ரூ. 1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை குறைந்ததைத் தொடர்ந்து, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 405க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மேலும் ரூ. 85 குறைந்து ஒரு கிராம் ரூ. 320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிலோவுக்கு ரூ. 85,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 3,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *