இரட்டிப்பு லாபம்.. எப்படி??
2025-26 செப்டம்பர் காலாண்டில், துரித உணவுச் சங்கிலிகளான டோமினோஸ் பீட்சா மற்றும் டன்கின் டோனட்ஸ் ஆகியவற்றின் தாய் நிறுவனமான ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸின் (JFL) ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.194.6 கோடியாக இரு மடங்கு உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஜூபிலண்ட் பார்தியா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் JFL தாக்கல் செய்துள்ள அறிக்கையின் படி, ஓராண்டுக்கு முன்பு ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்நிறுவனம் ரூ.66.53 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. நிதியாண்டு 2025-26இன் செப்டம்பர் காலாண்டில், JFL இன் செயல்பாட்டு வருவாய் 19.7 சதவீதம் அதிகரித்து ரூ.2,340.15 கோடியாக அதிகரித்துள்ளது. ஒரு வருடம் முன்பு இதே காலாண்டில் இது ரூ.1,954.71 கோடியாக இருந்தது.
JFL இன் மொத்த செலவுகள் ரூ.2,200 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், 2025-26இன் இரண்டாவது காலாண்டில் 16.05 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலாண்டில் அதன் மொத்த வருமானம், இதர வருமானத்தையும் சேர்த்து, 18.66 சதவீதம் அதிகரித்து ரூ.2,355.38 கோடியாக உயர்ந்துள்ளது.
நிதியாண்டு 2025-26இன் முதல் பாதியில் (H1), JFL-ன் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் ரூ.4,634.77 கோடியாக 17.77 சதவீதம் அதிகரித்துள்ளது.
JFL, மூன்று உலகளாவிய பிராண்டுகளான டோமினோஸ், போபீஸ் மற்றும் டன்கின் மற்றும் இரண்டு சொந்த பிராண்டுகளான, ஹாங்ஸ் கிச்சன் மற்றும் துருக்கியில் CAFE பிராண்டான – COFFY ஆகியவற்றுக்கான பிராஞ்ச்சைஸ் உரிமைகளைக் கொண்ட முன்னணி QSR நிறுவனமாகும்.
