22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

4% நிகர லாபம் உயர்வு

பல்வேறு துறைகளில் ஈடுப்பட்டுள்ள ஐடிசி நிறுவனத்தின் நிகர லாபம், இரண்டாவது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 4% அதிகரித்து ரூ.5,187 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 1% குறைந்து, ரூ.21,256 கோடியாக உள்ளது.

இந்த காலாண்டில் பல்வேறு செயல்பாட்டு சவால்கள் இருந்தபோதிலும், எஃப்எம்சிஜி பிரிவு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 8% வளர்ச்சியைப் பதிவு செய்தது (நோட்புக்கள் பிரிவு தவிர). பல பிராந்தியங்களில் அதிகப்படியான மழை மற்றும் ஜிஎஸ்டி விகித மாற்றம் காரணமாக இந்த பிரிவு குறுகிய கால இடையூறுகளை எதிர்கொண்டது. உணவு மற்றும் பால் பொருட்கள், பிரீமியம் ரக குளியல் பொருட்கள் மற்றும் அகர்பத்திகள் ஆகியவற்றால் வளர்ச்சி ஏற்பட்டது.

குறைந்த விலை காகித இறக்குமதி மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் கடும் போட்டிகளினால் நோட்புக் வணிகம் பாதிக்கப்பட்டது.

பொருட்களின் விலைகள் அதிகமாக இருந்தாலும் நிலையானதாக இருந்ததாகவும், இந்த பிரிவின் EBITDA விகிதம் 10% ஆக இருந்ததாக ஐ.டி.சி தெரிவித்துள்ளது, இது Q2 FY25 இல் 10.6% மற்றும் Q2 FY26 இல் 9.4% ஆக இருந்தது. டிஜிட்டல்-ஃபர்ஸ்ட் மற்றும் ஆர்கானிக் பொருட்கள் நல்ல வளர்ச்சியை அடைந்து, தோராயமாக ரூ.1,100 கோடி வருடாந்திர தொடர்ச்சியான வருவாயை (ARR) அடைந்தது.

சிகரெட் பிரிவில், சிறப்பு மற்றும் பிரீமியம் பிரிவுகளின் விற்பனை அதிகரிப்பினால் நிகர வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7% அதிகரித்துள்ளது.

காகித அட்டைகள் மற்றும் பேக்கேஜிங் பிரிவின் விற்பனை தொடர்ந்து அதிகரித்ததால், இந்த பிரிவின் லாபம் 17% அதிகரித்துள்ளது. லாப விகிதங்கள் காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில், 90 அடிப்படை புள்ளிகள் அதிகரிதது. இந்த பிரிவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5% அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *