22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
தங்கம்

சாதனை படைத்த தங்கம்..!!

அக்டோபர் 09 ஆம் தேதி தங்கம் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $4,000 என்ற மைல்கல்லை எட்டியது. முந்தைய குறைந்தபட்ச விலை அளவில் இருந்து இந்த உச்சபட்ச விலைக்கு உயர்வை எட்டுவதற்கு 735 நாட்கள் ஆனதாக உலக தங்க கவுன்சிலின் (WGC) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

$4,200/அவுன்ஸ் என்ற சாதனையை முறியடிக்க மேலும் 7 நாட்கள் ஆனது. அதே சமயத்தில் $3,500/அவுன்ஸிருந்து $4,000/அவுன்ஸ் ஆக, $500 விலை உயர்வு வெறும் 36 நாட்களில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் வரலாற்றில் மிக வேகமான விலை உயர்வு இது தான் என்று WGC தெரிவித்துள்ளது. தங்க விலை வரலாற்றில், $500/அவுன்ஸ் லாபத்தை அடைய எடுக்கப்பட்ட கால அவகாசம் சராசரியாக 1,036 நாட்களாக உள்ள நிலையில், இந்த 36 நாள் விலை உயர்வு மிக மிக அதி வேக உயர்வு என்று தெரிவித்துள்ளது.

தங்கத்தின் சமீபத்திய விலை உயர்வுக்கான கால அவகாசம், முந்தைய விலை உயர்வுகளின் சராசரி காலம் மற்றும் அளவை விட குறைவாகவே உள்ளது என்று WGC தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1976 முதல் ஜனவரி 1980 வரை தங்கம் அதன் உச்ச நிலையை அடைய 856 நாட்கள் ஆனது; டிசம்பர் 2015 முதல் ஆகஸ்ட் 2020 வரை 1,162 நாட்கள்; மற்றும் ஜனவரி 2007 முதல் செப்டம்பர் 2011 வரை 1,168 நாட்கள் ஆனது என்று தரவுகள் கூறுகின்றன.

புவிசார் அரசியல் பதட்டங்கள், டாலர் பலவீனம், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் பங்குச் சந்தை திருத்தம் குறித்த அச்சங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் ‘பாதுகாப்பான புகலிடத்தை’ நாடுவதால் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து, அதன் விலை உச்சமடைந்துள்ளாதாக WGC தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி தங்கத்தை தொடர்ந்து வாங்குவது, முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கவும், நேர்மறையான கண்ணோட்டத்தை உறுதிப்படுத்தவும் உதவியுள்ளது என்று WGC தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *