பங்குகளை விற்க பர்மிஷன் கேட்கும் BAT
பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ (BAT) நிறுவனம் ஐ.டி.சி ஹோட்டல்ஸில் உள்ள பங்குகளை விற்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அனுமதி கோரியுள்ளது.
ஐ.டி.சி. ஹோட்டல்ஸ் நிறுவனத்தில் BAT-க்கு 15.29% பங்கு உள்ளது. இது 1900களின் முற்பகுதியில் செய்யப்பட்ட முதலீடாகும். இந்த விற்பனையின் மூலம் 2026 ஆம் ஆண்டிற்குள் நிறுவனத்தின் கடனைக் குறைக்க முடியும் என BAT நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேடியோ மொராக்கோ (Tadeu Marroco) தெரிவித்தார்.
ஐ.டி.சி நிறுவனத்திலிருந்து ஹோட்டல் வணிகம் பிரிக்கப்பட்ட பிறகு, BAT, ஐ.டி.சி ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக ஆனது.
அனுமதிக்குக் காத்திருப்பு
ஐ.டி.சி ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் 15.29% பங்குகளை விற்பதற்கு பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ (BAT) நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அனுமதியை எதிர்பார்த்து உள்ளது.
இந்த பங்கு முதலீடு 1900களின் முற்பகுதியில் செய்யப்பட்டதால், இந்த விற்பனை செய்ய அனுமதி தேவை என BAT-ன் தலைமை நிர்வாக அதிகாரி டேடியோ மரொக்கோ கடந்த வாரம் தெரிவித்தார். ” விற்பனை செய்ய இந்திய மத்திய வங்கியின் அனுமதி தேவை” எனவும் அவர் கூறினார்.
கடனைக் குறைத்தல்
இந்த அனுமதி கிடைத்தவுடன், BAT தனது பங்குகளை விற்கத் தொடங்கும். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறுவனத்தின் கடனைக் குறைக்க முடியும். இந்த விற்பனையின் மூலம் வரும் வருவாயை நிறுவனத்தின் கடனைக் குறைப்பதற்காகப் பயன்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.
பங்கு நிலவரம்
ஐ.டி.சி -இடமிருந்து ஹோட்டல் வணிகம் பிரிக்கப்பட்ட பிறகு, BAT-க்கு ஐ.டி.சி ஹோட்டல்ஸ் நிறுவனத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடாக 15.29% பங்கு உள்ளது.
இதன் மூலம் ஜூன் மாதத்தின் பங்குதாரர்களின் எண்ணிக்கையின்படி, ஐ.டி.சி நிறுவனத்தின் 39.87% பங்கிற்குப் பிறகு, BAT மிகப் பெரிய பொதுப் பங்குதாரராக உள்ளது.
