சீனா அடுத்த அதிரடி..
உலகின் முன்னணி தங்கச் சந்தைகளில் ஒன்றான சீனாவில் பல வருடங்களாக நடைமுறையில் இருந்த தங்கம் விற்பனைக்கான வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தங்கம் வாங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி தங்கம் விற்பனையை மட்டுப்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
நவம்பர் 1 முதல், ஷாங்காய் தங்கச் சந்தையில் இருந்து வாங்கப்பட்ட தங்கத்தை, சில்லறை விற்பனையாளர்கள், நேரடியாகவோ அல்லது மதிப்பு கூட்டப்பட்ட பிறகோ விற்பனை செய்யும் போது, கொள்முதலின் போது செலுத்தப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியை கழித்து கொள்ள அனுமதி கிடையாது என நிதி அமைச்சகத்தின் புதிய சட்டம் கூறுகிறது.
சீனாவில் ரியல் எஸ்டேட் சந்தை மந்தமடைந்துள்ள நிலையில், பலவீனமான பொருளாதார வளர்ச்சி அரசின் நிதி நிலையை பாதித்துள்ள நேரத்தில், இந்த நடவடிக்கை சீன அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கச் செய்யும். ஆனால் இந்த வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டதால், சீன நுகர்வோர்களுக்கு தங்கம் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கும்.
உலகெங்கிலும் உள்ள சில்லறை முதலீட்டாளர்கள் வெறி கொண்டு தங்கத்தை வாங்கிக் குவித்ததால், சமீப மாதங்களில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. பின்னர் திடீர் விலை வீழ்ச்சிக்கு இது வகை செய்ததுள்ளது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தங்கத்தின் மோசமான தோல்வி,
கடந்த மே மாத இறுதியில் இருந்து பங்கு சந்தைகளில் பரிமாற்றம் செய்யப்படும் நிதி நிறுவனங்கள் தங்கத்தை தொடர்ந்து கொள்முதல் செய்து வந்த நிலையில், சமீப நாட்களில் தங்கம் விலை பெரும் வீழ்ச்சியடைந்தது. இந்தியாவில் பண்டிகை கால கொள்முதல் முடிவடைந்ததும் இதற்கு ஒரு காரணமாகும். இதற்கிடையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் நிறுத்தம், தங்கத்திற்கான தேவையைக் குறைத்தது.
ஆனால் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் $4,000 என்ற மைல்கல்லை அக்டோபரில் தாண்டிச் சென்ற நிலையில், அதே அளவில் தற்போதும் தொடர்கிறது. அதே சமயத்தில் தங்கம் விலையை உச்சமடையச் செய்த காரணங்களான உலகளாவிய மத்திய வங்கிகளின் கொள்முதல், அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவை தொடர்கிறது
