நீங்கள் ஃபோனில் பேசுவது ஒட்டுக்கேட்கப்படுகிறதா?
நீங்கள் யாருடனாவது ஒரு பொருளைப்பற்றி ஃபோனில் பேசிய அடுத்த நிமிடம் உங்கள் போனில் அது தொடர்பான விளம்பரங்கள் எப்படி வருகிறது என்று எப்போதாவது யோசித்தது உண்டா? இதை சற்று கவனியுங்கள், உங்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கலாம்.. 404 மீடீயா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, செல்போன்கள் வெறும் இணையம் சார்ந்த தரவுகளை மட்டும் திரட்டாமல், செல்போனில் பேசுவதையும் ஒட்டுக்கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் ஃபோன்களில் ஆக்டிவ் லிஸ்டனிங் என்ற நுட்பம் இருக்கிறது. இதனை பெரிய நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தி மக்கள் என்ன பேசுகிறார்கள், எதை தேடுகிறார்கள் என்பது பற்றி இந்த பெரிய நிறுவனங்கள் பொருட்களை அவர்கள் இணைய தேடலின்போது விளம்பரங்களாக வெளியிடுகின்றனர். ஆக்டிவ் லிஸ்டனிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம் மக்கள் பேசும் தகவல்கள் திரட்டப்பட்டு அதற்கு தகுந்தபடி பொருட்களை விளம்பரப்படுத்தும் பணிகளை பெரிய டெக் நிறுவனங்கள் செய்யத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு முறை புதிதாக செயலிகளை டவுன்லோடு செய்யும்போதும் இது போன்று தகவல்களை ஒட்டுக்கேட்போம், உங்களுக்கு சம்மதமா என்று கேட்கப்படுகிறது. அதில் பெரும்பாலானோர் என்ன இருக்கிறது என்பதை படிக்காமலேயே சம்மதம் என்று ஒப்புதல் அளித்து விடுகிறோம், அதன் மூலமாகவே செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்படுகின்றன. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் மிகக்கடுமையான சட்டங்கள் இருந்த போதிலும் ஒரு முறை செயலியை பதிவிறக்கும்போது ஒரு முறையாவது விதிகளை படித்தாலே இந்த பிரச்சனையில் இருந்து தப்பிவிட முடியும். வாடிக்கையாளரின் தனித்தகவல்களை திருடுவதில்லை என்ற வெளிப்படைத்தன்மை தேவை என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.