8% சரிந்த சிஜி பவர் நிறுவனம். .
இந்தியாவின் பழமையான தொழிலதிபர் குடும்பங்களில் ஒன்றான முருகப்பா குழுமத்தில் இருந்து இயங்கும் நிறுவனம் சிஜி பவர். இந்த நிறுவனத்தின் பங்குகள் மே 6 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் அதாவது 8 விழுக்காடு வரை விலை சரிந்தது. குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் பங்குகள் அண்மையில் வெளியிடப்பட்டன. மார்ச் வரையிலான காலாண்டில் மட்டும் அந்நிறுவனத்தின் வருவாய் 2753 கோடி ரூபாயாக இருந்தது. இது 2024-ல் இதே காலகட்டத்தில் இருந்ததை விட 26 %அதிகமாகும். அதே நேரம் ஆண்டுக்கு ஆண்டு நிகர லாபம் 16%உயர்ந்துள்ளது. கடந்த 2024 நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிகர லாபம் 234 கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் இந்த தொகை 272 கோடி ரூபாயாக இருந்தது. அந்த நிறுவனத்தின் மார்ஜின் தொகை 40 அடிப்படை புள்ளிகள் குறைந்து 12.6% ஆக உள்ளது. அதாவது கடந்தாண்டு இருந்த தொகை 13 % ஆக இருந்த நிலையில், இது தற்போது 11%ஆக குறைந்தது. சிஜி செமி மற்றும் அக்சிரோ செமிகண்டக்டர் பிரிவில் முதலீடுகள் செய்யப்பட்டதால் நிறுவனத்தின் மார்ஜின்கள் குறைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் அந்நிறுவனத்தின் நிதி புழக்கம் 202 கோடி ரூபாயாக இருந்தது. புதிதாக எடுக்கப்பட்ட ஆர்டர்கள் மதிப்பு 3,650 கோடி ரூபாயாகவும், செயல்படுத்தாமல் இறுக்கும் ஆர்டர்களின் மதிப்பு 9,909 கோடி ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச்சுடன் முடிந்த காலகட்டத்துக்கு இடைக்கால டிவிடண்ட்டாக 199 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியான நிலையில் சிஜி பவர் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 8 %விலை வீழ்ந்து 587 ரூபாயாக இருந்தது. இந்தாண்டில் மட்டும் 20 %மதிப்பை அந்நிறுவனம் இழந்து தவிப்பது குறிப்பிடத்தக்கது.
