பெட்ரோல் வண்டியைவிட இருமடங்கு நீடிக்குமாம்…
ஓலா என்ற மின்சார இருசக்கரவாகனங்கள் வழக்கமான பெட்ரோல் வாகனங்களைவிட இருமடங்கு அதிக காலம் உழைக்கும் என்று அந்தநிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார். அதாவது 8 ஆண்டுகள் அந்த வண்டிக்கு வாரண்டி இருக்கும் என்றும் அதாவது 80 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை வாரண்டி இருக்கும் என்று கூறியுள்ளார். பாரத் ஈவி ஃபெஸ்ட் என்ற நிறுவனத்தின் முன்னெடுப்பில் பேட்டரி வாரண்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. எஸ் 1 ஜியோ புரோ என்ற ஸ்கூட்டரின் 2 ஆவது தலைமுறை வாகனங்கள் 5 ஆண்டுகள் நீடித்த பேட்டரி வாரண்டிகளை கொண்டிருக்கும் என்றும் எஸ் 1 ஏர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பாதி விலையில் அப்கிரேட் செய்து தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பழைய பெட்ரோல் வாகனங்களை கொடுத்துவிட்டு 10 ஆயிரம் ரூபாய் வரை போனஸ் பெற்றுக்கொண்டு புதிய வாகனங்களை வாங்கலாம் என்றும் பவீஷ் குறிப்பிட்டுள்ளார். கூடுதலாக சில வகை கிரிடிட் கார்டுகளில் போனஸ்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். பாரத் ஈவி ஃபெஸ்ட் திருவிழிழாவில் ஜீரோ காஸ்ட் ஈஎம்ஐ, ஜீரோ பிராசஸசிங் கட்டணம் உள்ளிட்ட சலுகைகள் வரும் அட்கோபர் 30 வரை இருக்கும் என்றும் அவர் அறிவித்தார். அடுத்த காலாண்டிற்குள் நாடு முழுவதும் 10ஆயிரம் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் பவீஷ் குறிப்பிட்டார். ஓலாவில் எஸ்1 என்ற மின்சார வாகனத்தை 79,999 ரூபாய்க்கு விற்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. பட்ஜெட்டுக்கு தகுந்த மின்சார ஸ்கூட்டர்களையும் ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஓலா எஸ்1 புரோ என்ற வாகனம் தற்போது அறிமுகமாகியுள்ளது. ஓலா எஸ் 1எக்ஸ் என்ற புதிய வாகனம் வரும் என்று கடந்த ஆகஸ்ட்டிலேயே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.