அடுத்தடுத்து அசத்தும் NATCO
இந்தியாவின் நாட்கோ பார்மா, 135 ஆண்டுகள் பழமையான தென்னாப்பிரிக்க மருந்து நிறுவனமான அட்காக் இன்கிராமில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை வாங்க உள்ளது.
ரூ.420 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், அட்காக் இன்கிராம் நிறுவனம, நாட்கோ மற்றும் பிட்வெஸ்ட் நிறுவனங்களின் முழு கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனமாக மாறும். பிட்வெஸ்ட் நிறுவனம் இதில் பெரும்பான்மை பங்குதாரராக தொடரும்.
அட்காக் இன்கிராமின் பங்குதாரர்களின் கூட்டம், நிறுவனத்தின் அனைத்து சாதாரண பங்குகளையும் வாங்குவதற்கான நாட்கோவின் திட்டத்தை அங்கீகரித்ததுள்ளது. அட்காக் இங்க்ராம் பங்குதாரர்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானோர் நாட்கோ சலுகைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த ஆண்டு ஜூலையில், அட்காக் இன்கிராமின் பங்குகளை கொள்முதல் செய்வது குறித்து ஒரு கோரிக்கை மனுவை சமர்பித்திருந்ததாக நாட்கோ நிறுவனம் ஜோகன்னஸ்பர்க் பங்கு சந்தையில் (JSE) வெள்ளியன்று ஒரு அறிக்கையை அளித்தது. ஜூலையில் நாட்கோ முன் வைத்த கொள்முதல் திட்டத்தினால் அட்காக் இன்கிராமின் பங்கு விலையில் 20 சதவீதம் உயர்வு ஏற்பட்டது.
நாட்கோவிடம் இல்லாதவை, தற்போது பிட்வெஸ்டுக்குச் சொந்தமானவை மற்றும் அட்காக் இன்கிராமின் கருவூலப் பங்குகளைத் தவிர, அட்காக் இன்கிராமில் உள்ள அனைத்து இதர சாதாரண பங்குகளையும் நாட்கோ பார்மா தென்னாப்பிரிக்கா வாங்கும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கு கொள்முதல் முடிந்ததும், அட்காக் இங்க்ராம் JSE இலிருந்து நீக்கப்படும்.
1890 ஆம் ஆண்டு ஒரு சிறிய மருந்தகமாக தொடங்கப்பட்ட அட்காக் இங்க்ராம் தற்போது ஓவர்-தி-கவுன்டர் (OTC) ரக மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு ரக மருந்துகள் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் மருத்துவமனை தயாரிப்புகளைக் கொண்ட முன்னணி தென்னாப்பிரிக்க மருந்து நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அதன் பல பிராண்டுகள் தென்னாப்பிரிக்காவில் அனைத்து குடும்பங்களுக்கும் நன்கு அறிமுகமான பிரபல பிராண்டுகளாக மாறிவிட்டன
