கல்யாண் ஜூவல்லர்ஸ்: Q2 வருவாய்..
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நகை நிறுவனமான கல்யாண் ஜுவல்லர்ஸின் இந்திய செயல்பாடுகளின் காலாண்டு வருமானம், 2024-25 இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது, 2025-26 இரண்டாவது காலாண்டில் 31% அதிகரித்துள்ளது.
திருமண சீசன் மற்றும் நவராத்திரி பண்டிகை கால விற்பனை இதற்கு முக்கிய காரணங்கள். நீண்ட காலம் இயங்கும் கடைகளின் சரசாரி விற்பனை அளவின் வளர்ச்சி சுமார் 16% ஆக பதிவாகியுள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, சமீபத்தில் முடிவடைந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகள் சுமார் 17% வருவாய் வளர்ச்சியை பெற்றுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கில், 2024-25 இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 2025-26 இரண்டாம் காலாண்டில், வருவாய் வளர்ச்சி தோராயமாக 10% ஆக இருந்தது. சமீபத்தில் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாயில் சர்வதேச சந்தைகள் தோராயமாக 12% பங்களித்தன.
கல்யாண் ஜுவல்லர்ஸின் டிஜிட்டல்-முதல் நகை தளமான கேண்டேர், கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது சமீபத்தில் முடிவடைந்த காலாண்டில் தோராயமாக 127% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்தது. சமீபத்தில் முடிவடைந்த காலாண்டில், நிறுவனம் இந்தியாவில் 15 கல்யாண் ஷோரூம்களையும், மத்திய கிழக்கில் 2 ஷோரூம்களையும், இந்தியாவில் 15 கேண்டேர் ஷோரூம்களையும் அறிமுகப்படுத்தியது.
செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் இந்நிறுவனத்தின் மொத்த ஷோரூம்களின் எண்ணிக்கை 436 ஆக இருந்தது (கல்யாண் இந்தியா – 300, கல்யாண் மத்திய கிழக்கு – 38, கல்யாண் யுஎஸ்ஏ – 2, கேண்டெர் – 96)
