அமெரிக்கா விசா – காத்திருப்பு நேரம் அதிகமானது
சென்னையில் அமெரிக்காவிற்கான ’விசிட் விசா’விற்கான சராசரியாக காத்திருப்பு நேரம் 500 நாட்களுக்கு மேல் உள்ளது. அதாவது நீங்கள் இந்த மாதம் விசாவிற்கு விண்ணப்பித்தால், 2024 க்குள் சந்திப்பு தேதி எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணையதளத்தின்படி, சென்னையில், 513 நாட்களும், மாணவர் விசாவிற்கு 8 நாட்களும் சராசரியாக காத்திருக்க வேண்டும்.
புது தில்லியில் 582 நாட்களும், மாணவர் விசாக்களுக்கு 471 நாட்களும், மும்பையில், 517 நாட்களும், மாணவர் விசாவிற்கு 10 நாட்களும் காத்திருப்பு காலமாகும். ஐதராபாத்தில், 518 நாட்களும், மாணவர் விசாவிற்கு 479 நாட்களும், கொல்கத்தாவில், 587 நாட்களும், மாணவர் விசாவிற்கு 2 நாட்களும் காத்திருப்பு காலம் ஆகும்.
கனடாவில் தற்போது விசிட் விசாவிற்கு 158 நாட்கள் காத்திருக்கும் நேரம் உள்ளது.
முன்னதாக 30 மே, 2022 அன்று, இந்தியாவில் உள்ள டேனிஷ் தூதரகம் குறுகிய கால விசாக்கள் மற்றும் குடியிருப்பு அனுமதிகளுக்கான விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இது ஜூலை 6 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.
இதற்கிடையில், ஸ்பான்சர் செய்யப்பட்ட வேலைகள் மற்றும் மாணவர் விசாக்களின் கீழ் புதிய விண்ணப்பங்களுக்கான முன்னுரிமை விசா (PV) மற்றும் சூப்பர் முன்னுரிமை விசா (SPV) சேவைகளை இங்கிலாந்து விரைவில் தொடங்கும் என்றும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்கமாறும் ஆகஸ்ட் 12ந் தேதியன்று இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு கூறுகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சகம் (MEA) ஜூன் மாதம் ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, ஜெர்மனி, நியூசிலாந்து, போலந்து, UK மற்றும் USA ஆகிய நாடுகளுடன் இந்திய நாட்டினருக்கு மாணவர் விசாக்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விவாதித்தது.