Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி

சந்தைகள்செய்தி

தங்க பத்திரம் – தெரிந்து கொள்ள வேண்டியவை..!

இந்தியா, கச்சா எண்ணெய்க்கு அடுத்த படியாக, அதிகமாக இறக்குமதி செய்வது தங்கத்தை தான். மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்தன. உதாரணமாக, இறக்குமதி வரியை உயர்த்துவது, தங்க காசு விற்பனையை தடை செய்வது உள்ளிட்டவை, எதிர்பார்த்த அளவு பலன் தரவில்லை. இந்நிலையில், தங்கத்தின் மீது முதலீடு செய்யும் பத்திரங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்த தங்க பத்திரங்கள் மூலம் தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வட்டி வழங்கப்படும், அதாவது ஆண்டுக்கு 2.5 சதவிதம் வட்டி. கணக்கீட்டு அடிப்படையில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வட்டியாக கிடைக்கும். தங்கம், நம் கலாச்சாரத்தோடு சேர்ந்த விஷயம் என்பதால், அதில் மக்களை முதலீடு செய்ய வேண்டாம் என்று சொல்வதை காட்டிலும், தங்க பத்திரம் போன்ற மாற்று வழிகளில் முதலீடு செய்வது சிறந்தது என்ற கருத்து உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணம், தங்க காசுகளில், நகைகளில் செய்யப்படும் முதலீட்டை விட அதிக வருமானம் தரும் என்பதே உண்மை. தங்கத்தை முதலீடாக பார்ப்பதை விடுத்து மக்கள் வேறு வழிகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் முதலீடு செய்த பின்னர், அதற்கான முதிர்வு காலம் என்பது 8 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டும் 2.5 சதவிதம் வட்டி கிடைக்கும். அதாவது 8 ஆண்டுகளுக்கு சுமார் 20 சதவிதம் வட்டி கிடைக்கும்.

அது போக தங்கத்தின் விலை, சந்தை விலைக்கு ஏற்றாற்போல் மாறி கொண்டே இருக்கும். எப்படி ஒரு வீட்டை வாங்கினால், அதற்கு வாடகை வருகிறதோ அது போல், இந்த திட்டத்தில் வட்டி கிடைக்கும். அதேபோல், எப்படி அந்த வீட்டின் விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்றாற்போல், ஏறி இறங்குகிறதோ, அது போல் இந்த பத்திரத்தில் உள்ள தங்கத்தின் மதிப்பிலும் மாற்றம் இருக்கும். இந்த வட்டி தொகை, ஒருவரின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, வருமான வரி விதிக்கப்படும். இந்த திட்டத்திற்கான வட்டி தொகை 3 மாதங்களுக்கு ஒரு முறை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பத்திரங்களை மத்திய அரசின் சார்பாக, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது எனவே, இதன் பாதுகாப்பதன்மை உறுதி செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தில் தங்க பத்திரங்களை வாங்க ஒருவர் இந்தியராகவோ, NRI ஆகவோ இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒரு குழந்தையின் பெயரில் கூட முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்ச முதலீடு என்பது ஒரு கிராம், அதிகபட்ச முதலீடு என்பது ஆண்டுக்கு 4 கிலோ தங்கம் வரை முதலீடு செய்யலாம். உங்கள் வீட்டில் 3 பேர் இருக்கிறீர்கள் என்றால், ஒவ்வொருவர் பெயரிலும் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். இதுவே ஒரு அறக்கட்டளையின் பெயரில் முதலீடு செய்யும் போது 20 கிலோ வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் தங்கம் வேண்டும் என்று விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்கம் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், இந்த திட்டத்திற்கு தேவையான அனைத்து தரவுகளும் வழங்கப்பட வேண்டும்.

தங்க பத்திர திட்டத்தில் வாங்கும் போது, 24 கேரட் தங்கத்தில் தான் முதலீடு செய்யப்படுகிறது. அதே நேரம், ஒரு கிராம் தங்கத்திற்கு 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். 8 ஆண்டுகள் இந்த பத்திரத்திற்கான முதிர்வு காலம் என்றாலும், டிமேட் வடிவில் இந்த பத்திரம் இருந்தால், 5வது ஆண்டில் இந்த பத்திரத்தை சந்தையில் விற்பனை செய்ய முடியும். இந்த பத்திரங்களை அடமானம் வைத்து வங்கி கடனும் பெறமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *