கூகுளுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு…
கொரோனா காலகட்டத்தில் செல்போன் செயலிகள் மூலம் கடன்பெறும் வசதி மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால கட்டத்தில் வகை தொகை இல்லாமலும் எந்த விதிகளையும் பின்பற்றாமலும் சில கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பிடித்திருந்தன. இந்த சூழலில் மோசடி ஆப்கள் மூலம் பணத்தை இழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவன அதிகாரிகளை மத்திய அரசு பலமுறை அழைத்து எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூகுள் இல்லை என்றாலும் மோசடி செயலிகள் பெரும்பாலும் கூகுள் பிளே ஸ்டேரில்தான் இருக்கிறது என்பதால் இந்த விவகாரத்தில் மிகச்சரியாக நடந்துகொள்ளும்படி மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆப்கள் மூலம் பணம் பெறும் வசதியில் 95 விழுக்காடு மோசடி செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் தான் உள்ளது என்கிறது புள்ளி விவரம். செயலிகள் வாயிலாக மட்டும் இந்தியாவில் 2.2பில்லியன் டாலர் அளவுக்கு கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் புதிய விளம்பர பாலிசயை அறிமுகப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கொள்கை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதன்படி புதிய நிதி சார்ந்த விளம்பரம் அளிக்கும் நபர்கள் தங்கள் அடையாளங்களை கூகுளிடம் அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது