மகேந்திரா பைனான்ஸ் நிறுவனத்துக்கு தடை …..
இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம், இந்த நிறுவனம் வாகனங்கள் வாங்க கடன் அளித்து வருகின்றது. அண்மையில் ஜார்க்கண்டில் டிராக்டருக்கு வாங்கிய கடனை விவசாயி செலுத்தவில்லை என்பதற்காக மகேந்திரா நிறுவனம் அனுப்பிய நபர், டிராக்டரை பறிமுதல் செய்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் விவசாயியின் 27 வயது கர்ப்பிணி மனைவியை டிராக்டர் ஏற்றி கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. புகார் எழுந்த்தை அடுத்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, மகேந்திரா நிதி நிறுவனம் கடன் வசூலில் 3வது நபரை பணியில் அமர்த்தக்கூடாது என்றும், அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது
சொந்த பணியாளர்களை மட்டுமே அடுத்த அறிவிப்பு வரும் வரையில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. மகேந்திரா நிதி நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 223.75ரூபாயாகவும், சந்தை மதிப்பில் அதன் விலை 27 ஆயிரத்து 644 கோடி ரூபாயாகவும் உள்ளது
நாடு முழுவதும் 81 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.1,384அலுவலகங்கள் மூலம் 3 லட்சத்து 80 ஆயிரம் கிராமங்கள் மற்றும் 7 ஆயிரம் நகரங்களில் நிதி அளித்து வாகனங்கள் வாங்க உதவி வருகிறது.