19 ஆயிரம் கோடி ரூபாய் தருகிறதா மத்திய அரசு …. ???
இந்திய அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கித்தவித்து வருகின்றன. இரு நிறுவனங்களும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளன.
இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் 33 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த கடனை அடைக்க மத்திய அரசு உதவி செய்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு பிஎஸ்என் எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் அளித்தது.பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபகரமாக மாற்ற 1 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க உள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்துள்ளது. இதுவரை 4ஜி சேவை அளிக்கப்படாத நிலையில் பெரும்பாலான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் பக்கம் சென்றுவிட்டனர். இந்த நிலையில் விரைவில் 4ஜி சேவையை அளிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் தயாராகி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனமும் டாடா கன்சல்டன்சி நிறுவனமும் இணைந்து இந்தியா முழுக்கவும் 1லட்சம் புள்ளிகளில் 4ஜி சேவை வழங்க பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 4ஜி சேவை வந்ததும் பிஎஸ் என் எல் நிறுவனம் லாபகரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4ஜி சேவை வந்தாலும் 2ஜி மற்றும் 3ஜிசேவையை பிஎஸ்என்எல் தொடர்ந்து அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது