அதிகரிக்கும் வட்டி விகிதம்:காரணம் என்ன?
உலகம் முழுக்க உள்ள பல நாடுகளில் ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தங்கள் வங்கிகளுக்கு அளிக்கும் கடன்களின் விகிதத்தை உயர்த்தியுள்ளன. இதன் பின்னணியில் உள்ள புரிதல் மிக அவசியம், கிடைக்கும் பணத்தை வருங்காலத்துக்கு சேமித்து வைப்பதற்கு பதிலாக பொருட்களாக வாங்கினால் சந்தையில் பொருட்களின் விலை குறையும் என்பதே இந்த கடன் விகித உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
கடன் விகிதங்களின் அளவை உயர்த்துவதுதான் சந்தையில் நிலைத்தன்மையையும், பணப்புழக்கத்தையும் கட்டுப்படுத்தும் முக்கிய முயற்சியாகும், புதிய கடன்கள் அதிக தொகை கொடுத்து வாங்கும்பட்சத்தில் தற்போதுள்ள சந்தை நிலவரம் மாற்றம் அடையும்.
அமெரிக்க டாலரின் மதிப்பு கூடும்போது தங்கத்தின் மதிப்பு சரியும்,இந்த அடிப்படையில் அண்மையில் அமெரிக்க டாலர் வரலாறு காணாத உச்சத்தில் தனது மதிப்பை வைத்திருக்கிறது. இதன் காரணமாக தங்கம் சரிந்து வருகிறது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை,மருந்துத்துறை பங்குகள் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த கடுமையான சூழலில் இந்தியாவின் ஏற்றுமதி திறன் எலாஸ்டிக் போல அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் இறக்குமதி குறைந்துள்ளது.
முதலீடு செய்ய விரும்புவோர், சரியான வகையில் பணத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் நிரந்தர வருவாய் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்