42 வருஷத்திற்கு பிறகு இப்போ தான் நடக்குது!!!!
பிரிட்டனில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் உணவுப் பொருட்களின் விலை 14.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த அளவு கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவாக உள்ளது. பிரெட், இறைச்சி, பால் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. ஒட்டுமொத்தமாக பிரிட்டனின் பணவீக்க விகிதம் 10.1% ஆக உயர்ந்திருக்கிறது.
மீன், சர்க்கரை,பழங்கள் மற்றும் அரிசியின் விலையும் கடந்த மாதம் உயர்ந்துள்ளதாக அந்நாட்டு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உக்ரைன்,ரஷ்யா இடையேயான போர் காரணமாகவே பல பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு பிரிட்டனில் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரியில் விலையேற்றம் குறித்து எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில் 69 விழுக்காடு பேர் கவலை அடைந்த நிலையில் கடந்த மாதம் 85% பேர் கவலையில் உள்ளனர். அதிகரித்து வரும் விலைவாசியின் காரணமாக 10-ல் 9 பேர் பணத்தை சேமிக்கத் தொடங்கியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன