லைட் விக்கிற கம்பெனியை லோ வோல்டேஜ்ல தவிக்குது….
நிர்வாக செலவுகள் கட்டுக்கு அடங்காமல் செல்வதால் பிரபல பிலிப்ஸ் நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
டச் நிறுவனமான இந்நிறுவனத்தில் இருந்து மட்டும் 4 ஆயிரம் பேர் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.
இப்படி ஆட்களை குறைப்பதன் மூலம் மட்டும் அந்த நிறுவனத்துக்கு 295 மில்லியின் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பணம்
மிச்சமாகும் அந்த நிறுவனத்தில் புதிய தலைமை செயல் அதிகாரியாக ராய் ஜேக்கப்ஸ் என்பவர் தலைமை செயல் அதிகாரியாக
வர உள்ளார். அவரின் ஆலோசனைப்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.12 ஆண்டுகளாக பிரான்ஸ்வான் என்பவர்
தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த நிலையில், புதிய சிஇஓவின் முடிவால் அந்த நிறுவன ஊழியர்கள்
அதிர்ச்சியில் உள்ளனர் அந்த நிறுவனம் மருத்துவம் சார்ந்த பொருட்களை அதிகளவில் தயாரித்து அதில் நஷ்டமடைந்துள்ளனர். பிலிப்ஸ் நிறுவன பங்குகள் 60 விழுக்காடு இந்தாண்டு மட்டும் குறைந்துள்ளது. அந்நிறுவனம் தயாரித்த வெண்டிலேட்டர்களில் பயன்படுத்தும் பொருட்களை சுவாசிப்பதன்மூலம் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக பல்வேறு நாடுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடுத்தடுத்து பல கட்டங்களில் அடிவாங்கும் பிலிப்ஸ் நிறுவனம் மீண்டும் இயல்பு
நிலைக்கு திரும்ப அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.