அப்பாடா !!!!ஒரு வழியா வந்துருச்சு பா !!!!
இந்தியாவுக்கு என ஒரு பிரத்யேக டிஜிட்டல் கரன்சியை உருவாக்க இந்திய ரிசர்வ் வங்கி தீவிர முயற்சிகளை செய்து வருகிறது
இதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் ரூபாய் என்ற திட்டம் இன்று அறிமுகமாகிறது. முதல்கட்டமாக மொத்த விற்பனை சந்தையில்
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சோதித்து பார்க்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.
டிஜிட்டல் வகை பணப்பரிவர்த்தனை களமிறங்கும்பட்சத்தில் வணிகத்தில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான தேவையற்ற
பரிமாற்றங்கள் குறையும் என்று ரிசர்வ் வங்கி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. டிஜிட்டல் ரூபாய் எப்படி இயங்கும் என்று கடந்தமாதமே ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி என்ற அமைப்பின் மூலம் இந்த டிஜிட்டல் ரூபாய் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சாதாரண பொதுமக்கள், அரசாங்கங்ககள் ஆகியவை டிஜிட்டல் பணம் பயன்படுத்துவதற்கு உதவி செய்கிறது. தனியார் டிஜிட்டல் கரன்சிகளான பிட்காயின் உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக களமிறங்கியுள்ள டிஜிட்டல் ரூபாய் , மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என்று எதிர்
பார்க்கப்படுகிறது. தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த ரிசர்வ் வங்கி,புதிய டிஜிட்டல் ரூபாயை குறுகிய காலத்தில் சந்தைக்கு கொண்டுவர தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. யார் மூலம் கிடைக்கும் பணம் என்றே தெரியாத டிஜிட்டல் கிரிப்டோ கரன்சிகளுக்கு பதிலாக நம்பகமான, பாதுகாப்பான டிஜிட்டல் கரன்சிகள் இந்திய ரூபாய் குறித்த வெளிநாட்டினரின் பார்வையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.