கடவுள் பாதி… மிருகம் பாதி… எலான் மஸ்குடன் வேலை பார்த்தவர்களின் அனுபவங்கள்!!!!
கடந்த சில வாரங்களாக இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் முக்கிய விவாதப் பொருளானது டிவிட்டர் நிறுவனம்தான்
நீண்ட இழுபறிக்கு பிறகு டிவிட்டர் நிறுவனத்தை பெரும் தொழிலதிபரான எலான் மஸ்க் வாங்கிவிட்டார். இந்த நிலையில் அவர் இரக்கமே இல்லாமல் பணியாளர்களை கசக்கி புழிவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த சூழலில் அமெரிக்க தொழிலதிபரான ஜிம் கான்ட்ரல் என்பவர் மஸ்க் பற்றி பேட்டியளித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப கால கட்டத்தில் மஸ்குடன் இவர் பணியாற்றியுள்ளார் தன்னுடைய சொந்த அனுபவத்தை வைத்து அவர் மஸ்க் ஒரு இரக்கமற்றவர் என்று விமர்சித்துள்ளார்.எலான் மஸ்க்குக்கு இருமுகங்கள் உள்ளதாகவும் முதல் முகம் சிரித்து, வேடிக்கையாக உள்ளதாகவும், இரண்டாவது முகம் மிகவும் கொடூரமானது மற்றும் கோபமானது என்றும் ஜிம் தெரிவித்துள்ளார். அவருடன் பணியாற்றும் போது இரு வேறு மனிதர்களுடன் பயணிக்கும் அனுபவம் கிடைக்கும் என்றும் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வார் என்று தெரியாத அளவுக்கு மஸ்க் நடந்துகொள்வார் என்றும் ஜிம் கூறியுள்ளார். யாரையும் நம்பாமல்,மிக மோசமான மஸ்காக கூட சில சமயங்களில் எலான் நடந்து கொள்வார் என்றும் ஜிம் கூறியுள்ளார். நிறைய விஷயங்களை மஸ்கிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும் என்று கூறும் ஜிம், ஆனால் மரியாதையை மஸ்கிடம் எதிர்பார்க்க முடியாது எனவும், இந்த காரணத்தால்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகியதாகவும் ஜிம் தெரிவித்துள்ளார்.