Latest:
தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணிதேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணி

உள்நாட்டு செய்திகள்

ஈரான் போரினால் பங்கு சந்தையில் ரூ.6.35 லட்சம் கோடி இழப்பு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்ததன் விளைவாக இந்திய பங்குச் சந்தைகளும், ரூபாயும் சரிந்தன. அதே நேரத்தில் தங்கம், வெள்ளி விலைகள் நேற்று உயர்ந்தன. இந்த விற்பனை BSE-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பை ரூ.6.35 லட்சம் கோடிஅளவுக்கு குறைத்தது.

உலகின் முன்னணி எரிசக்தி மையமான மேற்கு ஆசியாவில் விநியோக இடையூறுகள் குறித்த கவலைகளினால், கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 8% உயர்ந்தது. இது நிகர இறக்குமதியாளராக இந்தியாவின் பாதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

NSE இன் நிஃப்டி 312.95 புள்ளிகள் அதாவது 1.2% சரிந்து 24,865.70 இல் நிறைவடைந்தது. BSE இன் சென்செக்ஸ் 1048.34 புள்ளிகள், அதாவது 1.3% சரிந்து 80,238.85 இல் முடிந்தது.

“வளைகுடாவில் முன்னெப்போதும் இல்லாத புவிசார் அரசியல் நிகழ்வுகளுக்கு சந்தைகள் எதிர்வினையாற்றுகின்றன” என்று கோட்டக் சொத்து மேலாண்மை நிர்வாக இயக்குனர் நிலேஷ் ஷா கூறினார்.
“விலை, எண்ணெய் இருப்பு மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள 90 லட்சத்திற்கும் அதிகமான குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவிற்கு அவர்கள் பணம் அனுப்புதல் தடை படுதல் குறித்து பங்கு சந்தை கொண்டுள்ளது” என்று ஷா கூறினார்.

ஈரானின் கடற்கரையிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், திங்கட்கிழமை பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் $79ஆக உயர்ந்தது.

ஈரானிய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் அரம்கோ சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று அதன் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியது. போர் நீண்ட காலம் தொடர்ந்தால், கச்சா எண்ணெய் விலை $100 ஆக உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த போர் சுமார் நான்கு வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறார்.

அதிக கச்சா எண்ணெய் விலைகள் இந்தியாவின் இறக்குமதி பில்களை அதிகரிக்கின்றன. ரூபாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பிப்ரவரியில் அன்னிய முதலீட்டாளர்கள் ₹19,782 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கிய நிலையில், மார்ச் மாதத்தின் முதல் வர்த்தக நாளில் ₹3,295.64 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *