விரைவில் வரப்போகும் மகிழ்ச்சியான அறிவிப்பு!!!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கடன் வாங்குவோரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் டெபாசிட் செய்பவர்களை ஊக்கப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன. 50 முதல் 75 அடிப்படை புள்ளிகளை பல நிறுவனங்களும் உயர்த்தியுள்ளன. முன்னணி நிதி நிறுவனமான சுந்தரம் பைனைன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு குறுகிய காலகட்டத்தில் அதிகபட்சமாக 8 % வரை வட்டி தர இசைவு தெரிவித்துள்ளது. எச்டிஎப்சி வங்கி 45 மாதங்களுக்கு வைக்கப்படும் டெபாசிட் தொகைக்கு வட்டியாக ஏழரை விழுக்காடு அளிக்கிறது. மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் தனது வாடிக்கையாளர்களை குஷி படுத்த அண்மையில் டெபாசிட்டுக்கான வட்டியை அதிகரிததுள்ளது. அதிகரித்து வரும் கடன் மற்றும் டெபாசிட் காரணமாக நிதி நிறுவனங்களும்,வங்கிகளும் பயனடைந்துள்ளன என்றாலும் மேலும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டுமானால் டெபாசிட்க்கு உண்டான வட்டியை தற்போது உள்ளதை விட கூடுதலாக 100 முதல் 150 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.