யாருக்கு கிடைக்கும்? அதானிக்கா? அம்பானிக்கா?…
இந்தியாவில் பிரபலமான வணிக நிறுவனமான பிக் பசாரின் தாய் நிறுவனமான ஃபியூச்சர் குழுமம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.இந்த நிலையில் பியூச்சர் ரீட்டெயிலின் கடனை சரிசெய்ய பிக்பசார் உள்ளிட்ட வணிகத்தை விற்க அந்த நிறுவனம் திட்டமிட்டது. ரிலையன்ஸ் குழுமம் பிக்பசாரை வாங்க எடுத்த முயற்சிகளை எதிர்த்து அமேசான் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இந்த நிலையில் திவால் நிலையில் உள்ள பியூச்சர் குழுமத்தின் ரீட்டெயில் வணிகத்தை முழுமையாக கைப்பற்றி கொள்ளஏலம் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது.இந்த நிலையில் இசைவு தெரிவிக்க கடந்த மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. பியூச்சர் குழுமரீட்டெயிலை வாங்க, உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் , அதானி குழுமத்தின் தலைவருமான கவுதம் அதானியும்,முகேஷ் அம்பானியும்விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த பெரிய ஜாம்பவான்கள் மட்டுமின்றி மேலும் 13 பேரும் விருப்பம் தெரிவிக்கின்றனர்.வரும் 20ம் தேதிக்குள் இறுதிப்பட்டியல் தயாராக உள்ளது. பியூச்சர் நிறுவனத்தின் பங்குகளை யார் வாங்குவது என்பது குறித்த இறுதி முடிவு வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் இறுதி செய்யப்பட உள்ளது. பியூச்சர் குழுமத்தில் உள்ள கடனை அடைக்க எந்த பெரிய தொழிலதிபர் முன்வருவார்கள் என்பதே தற்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.