வேதாந்தாவுக்கு அபராதம் விதித்த செபி…
முக்கியமான ஆவணங்களை இணைத்து பங்குச்சந்தைகளில் வர்த்தகத்தை மேற்கொள்வது அனைத்து துறைகளிலும் பெரிய சவலான விஷயம்.இந்த நிலையில், விதிகளை மீறியதாகவும்,முக்கியமான ஆவணங்களை சமர்பிக்கவும் இல்லை என்று கூறி, பங்குச்சந்தை ஒழுங்கு படுத்தும் அமைப்பான செபி, வேதாந்தா குழுமத்துக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. செமி கண்டக்டர்கள் எனப்படும் அரைக்கடத்திகளை தயாரிக்கப் போவதாக கூறி நிதி திரட்டிய வேதாந்தா நிறுவனம் பொய் கூறியதாக செபி தெரிவித்துள்ளது. இது பங்குச்சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறியுள்ள செபி, இது விதிமீறல் என்று தெரிவித்துள்ளது. குஜராத் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கடந்தாண்டு செப்டம்பர் 13ஆம் தேதி அரைகடத்திகள் தயாரிப்புக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக தகவல் பரவலாக வெளியான நிலையில் இதற்கான எந்த பணிகளையும் வேதாந்தா குழுமம் செய்யவில்லை. வேண்டுமென்றே செய்த மாற்றத்தை தொழில்நுட்ப கோளாறு என்று கருதமுடியாது என்று கூறியுள்ள செபி அபராதத்தை போட்டுத்தாக்கியுள்ளது. எப்போதெல்லாம் அறிவிப்புகளில் சந்தேகம் வருகிறதோ அப்போதெல்லாம் செபி உடனடியாக களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு வருகிறது. இது நல்ல விஷயம்தான் என்று பல முதலீட்டாளர்களும் தெரிவித்துள்ளனர்.