உகந்த சூழல் இல்லை என்றாலும் பரவாயில்லை…!!!
ஐடிசி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார் சஞ்ஜீவ் புரி. அந்த நிறுவனத்தின் 112 ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது ஐடிசி நெக்ஸ்ட் என்ற உத்தியை பயன்படுத்த இருப்பதாக கூறினார். மிகச்சிறந்த போட்டி வாய்ப்புடன் எப்எம்சிஜி துறையில் திகழ ஐடிசி நிறுவனம் இலக்கு கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உலகில் நிலையற்ற சூழல் தற்போது நிலவுவதாகவும், அதனையும் கடந்து வாடிக்கையாளர்களே முக்கியம் என்ற நோக்குடன் ஐடிசி நிறுவனம் இயங்குவதாகவும் புரி தெரிவித்தார். 2023 நிதியாண்டில் ஐடிசி நிறுவன பங்குகள் 18 விழுக்காடு வளர்ச்சி அடைந்திருப்பதாக கூறிய அவர், சிகரெட் இல்லாத Ebitdta 43விழுக்காடு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றார். இது அனைத்து வகை பிஸ்னஸ்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017 முதல் 23 நிதியாண்டு வரை ஐடிசி நிறுவனத்தின் டர்ன் ஓவர் 1.8மடங்கு உயர்ந்திருப்பதாகவும் புரி பெருமிதம் தெரிவித்தார். ஏற்றுமதியின் அளவும் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உலக சந்தைகளுடன் விவசாயிகளை இணைக்கும் முயற்சியில் ஐடிசி இறங்கியுள்ளதாக கூறிய புரி,ஐடிசி நிறுவன பொருட்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைப்பதாகவும் தெரிவித்தார். இன்னும் புதிதாக 5 புதிய ஆலைகள் மற்றும் ஒரு சொகுசு ஹோட்டல் கட்டவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். 600 கோடி பேரின் வாழ்வியலுடன் 20 ஆண்டுகளாக ஐடிசி நிறுவனம் இயங்கி வருவதாகவும் புரி குறிப்பிட்டார்.வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக புரி கூறினார்.