22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஆர்பிஐ கட்டுப்பாடு..

வங்கியில்லாத நிதி நிறுவனங்களில் P2P வகையைச்சேர்ந்த கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் வெளிப்படைத்தன்மையும், புகார்களும் சரியாக கையாளப்படவேண்டும் என்றும் இவை இரண்டும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச ரிட்டர்ன்ஸ், பணமாக்கும் சலுகைகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த வகையான காப்பீடுகளையும் இந்த வகைய கடன் வழங்கும் நிறுவனங்களும் விற்பனை செய்யக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. சரியான கொள்கை ஆவணங்களில் தகவல்கள் பொருந்தாமல் கடன்களை வழங்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டே ரிசர்வ் வங்கி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சில நிறுவனங்கள் விதிகளை மீறுவது தெரியவந்துள்ளதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, விதிகளை மீறி சில நிறுவனங்கள் இயங்குவதை கண்டறிந்துள்ள அந்த வங்கி, விதிகளை மீறிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும் திருத்தி வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் காட்டமாக குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *