ரிலையன்ஸில் போனஸ்…
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூடி வரும் 5 ஆம் தேதி போனஸ் குறித்து இறுதி முடிவு அறிவிக்க இருக்கின்றனர். 1க்கு 1 என்ற கணக்கில் இந்த போனஸ் பங்குகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் ரெக்கார்டு தினம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்கும் இரண்டாவது போனஸ் பங்கு இதுவாகும். கடந்த 2017ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் இதேபோல 1க்கு 1 என்ற கணக்கில் போனஸை அறிவித்தது. அந்நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. குறிப்பிட்ட தேதிக்குள் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளை வாங்கினால் மட்டுமே இந்த இலவச ஷேர் கிடைக்கும். அதை தாண்டி வாங்கினால் இந்த சலுகை கிடைக்காது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.31 விழுக்காடு விலை உயர்ந்து வியாழக்கிழமை 3 ஆயிரத்து 65 ரூபாயாக விற்கப்படுகிறது. கடந்த 12 மாதங்களில் இந்த நிறுவன பங்கு 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.