மிகக்கடுமையான மந்தநிலை வெயிட்டிங்?
அமெரிக்காவில் மிகக்கடுமையான பொருளாதார மந்தநிலை வரப்போவதாக முன்னணி முதலீட்டாளரான மேட் ஹிக்கின்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க மந்த நிலை காரணமாக மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கடன் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை உயர்வு, ஆகிய இரண்டு காரணிகளால்தான் இந்த மந்தநிலை வரப்போவதாகவும், ஹிக்கின்ஸ் கூறுகிறார். பொருளாதார மந்தநிலையால் மேலும் பலருக்கு வேலை போகலாம் என்றும் ஹிக்கின்ஸ் கருத்து தெரிவிக்கிறார். அதே நேரம் அந்த மந்த நிலை நெடுங்காலம் நீடிக்காது என்றும்.வரும் நாட்களில் மந்த நிலை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். வேலைவாய்ப்பின்மையை சரி செய்யும் பங்கை செயற்கை நுண்ணறிவு கையில் எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் ஆருடம் தெரிவிக்கிறார். அமெரிக்க நிறுவனங்களின் வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவுன் பங்கு அதிகம் என்று கூறும் அவர், மந்தநிலை மேலும் தொடர வாய்ப்புள்ளது என்று குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை நிச்சயம் வரும் என்று கணிக்கும் நிபுணர்கள், அது குறைந்த காலம் இருக்கும் அதேநேரம் மிகக்கடுமையாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.