வரலாறு படைத்த இந்திய பங்குச்சந்தைகள்..
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20 -ல்) இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1359 புள்ளிகள் உயர்ந்து 84,544 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 375 புள்ளிகள் உயர்ந்து 25,791புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. உலகளவில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட உயர்வு காரணமாக இந்திய சந்தைகளும் அதையே எதிரொலித்தன. இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 7 நாட்களில் 2 %உயர்ந்துள்ளன. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் , ஆட்டோமொபைல், சுகாதாரத்துறை, ஆற்றல், டெலிகாம் உலோகம் உள்ளிட்ட துறை பங்குகள் 1 முதல் 3 % ஏற்றம் கண்டன. M&M, ICICI Bank, JSW Steel, Bharti Airtel L&T நிறுவன பங்குகள் பெரிய அளவில் விலை உயர்ந்து வர்த்தகத்தை முடித்தன.
இதேநேரம் Grasim Industries, SBI, IndusInd Bank, TCS,Bajaj Finance ஆகிய நிறுவனங்கள் பெரிய சரிவை கண்டன. Asahi India, Max Healthcare, JSW Energy, Cholamandalam Financial Holdings, Lloyds Metals, Shyam Metalics, Home First. HFCL, Mankind Pharma, Zomato, JSW Steel, ICICI Bank, Fortis Healthcare, United Spirits, PB Fintech, Bharti Airtel, Bajaj Holdings, Quess Corp, Havells India உள்ளிட்ட 260 நிறுவன பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சம் தொட்டன. செப்டம்பர் 20ஆம் தேதி வெள்ளிக் கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 55ஆயிரத்து 80 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் 60 ரூபாய் உயர்ந்த தங்கம் 6 ஆயிரத்து 885 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து கிராம் 97 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ ஆயிரத்து 500 ரூபாய் உயர்ந்து 97 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்