Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

சுந்தர் பிச்சை சொன்னது என்ன..

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் தமிழரான சுந்தர்பிச்சை. இவரிடம் அண்மையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த சுந்தர், தங்கள் நிறுவன பொருட்களை மக்களுக்கு எளிமையாக அளிக்கவே விரும்புவதாக கூறினார். ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் கூகுள் தேடலுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்தது பற்றி கேள்வி எழுப்பியபோது, இது தொடர்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். எந்த வகையான நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்பதை கூறாத சுந்தர் பிச்சை, கூகுள் தேடுபொறிதான் உலகில் சிறந்தது என்றார். தங்கள் நிறுவனம் மிகவும் சிறப்பானது என்று கூறிய அவர், புதுப்புது கண்டுபிடிப்புகள் தங்கள் நிறுவனத்தில் இருந்துகொண்டே இருப்பதுதான் தங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் அதனை தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம் என்றும் கூறினார். மக்கள் தான் தங்கள் நிறுவனத்தை தேர்வு செய்ததாகவும், மக்களுக்கு எப்போதும் சிறப்பான பொருள் மீது ஆர்வம் உண்டு என்றும், வாடிக்கையாளர்கள் மற்றும் பார்ட்னர்களாக அவர்களுடன் இணைந்தே இருப்போம் என்றும் சுந்தர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக வலுவான அடித்தளம் கொண்டுள்ள தங்கள் நிறுவனம் பழைய பிழைகளில் இருந்து பாடம் கற்றுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *